குஜராத்தின் வதோதராவில் திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றி பாலியலுறவு வைத்த தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஃபதேஹ் நகரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த இளம்பெண்ணுக்கு, தனது நண்பர்கள் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருடன் பழக்கம் உண்டானது. பின்னர் செல்போன் நண்பரை பகிர்ந்துகொண்ட இருவரும் இரவு முழுவதும் பேச தொடங்கினர்.
இதனால் இந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றிய நிலையில் 2017ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஒரு கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் ஒரு ஹோட்டலை முன்பதிவு செய்து முதலிரவும் நடந்தது. அதனை தொடர்ந்து தொழிலதிபர் கல்லூரி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இந்நிலையில் அந்த மாணவியின் நிர்வாண புகைப்படம், வீடியோக்களை அவருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பெற்றோர் ஆதரவு தெரிவிக்கவில்லை எனக்கூறி கல்லூரி மாணவியை தொழிலதிபர் பிரிந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கணவனைத் தேடி அவரது வீட்டிற்கு சென்றப் போது, அங்கு அவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
பிறகு நண்பர்களின் உதவியுடன், அவர் கணவனிடம் நீதி கேட்க சென்றப் போது அங்கு சில நாட்கள் தங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர் உணவில் சில மருந்துகளை கலந்து சாப்பிட கொடுத்து அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்தார்.
மறுபடியும் அந்த பெண் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய போது, அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய ரூ.15 லட்சம் கொடு இல்லையெனில் உன்னை வப்பாட்டியாக வச்சிக்கிறேன் என்று தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். தகவல் கிடைத்ததும், காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தியது.