தமிழக முதல்வராக 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்தக் கொள்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் ஓர் ஆண்டு கால ஆட்சியில் மக்களுக்கு எல்லா விதங்களிலும் முன்னேற்றம் தரக்கூடிய அளவு நல்லாட்சி தர வேண்டும். நடந்து முடிந்த மூன்று ஆண்டுகாலம் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக தேமுதிக சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.” எனக் கூறியுள்ளார்.