பெங்காலி நடிகர், முன்னாள் எம்பி தபஸ் பால் விமான நிலையத்தில் மாரடைப்பால் காலமானார்.
பெங்காலி நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி தபஸ் பால் (61) செவ்வாய்க்கிழமை பிப்ரவரி 18 மும்பையில் மாரடைப்பால் காலமானார்.
அண்மையில் மும்பையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற தபஸ் செவ்வாய் அன்று விடியற்காலை 4 மணிக்கு கொல்கத்தா திரும்பிச் செல்வதற்காக ஏர்போர்ட்டுக்கு வந்தார். அதே நேரத்தில் இருந்தாற் போலிருந்து திடீரென்று இதயத்தில் வலி வந்ததால் அவரை அங்கிருந்து ஜுஹுவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை பெறும்போது செவ்வாயன்று காலை மரணமடைந்தார். தபஸ் பாலுக்கு மனைவி நந்தினி, மகள் ரோகிணி பால் உள்ளார்கள்.
இதயம் தொடர்பான பிரச்சினையால் கடந்த காலத்தில் கூட அவர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவருடைய மரணம் குறித்து பெங்காலி நடிகர் மாலீக் அதிர்ச்சி தெரிவித்தார்.
சில காலமாகவே தபஸ் உடல்நிலை சரியின்றி உள்ளார். தபஸ்பால் 1980ல் தருண் மஜூம்தார் இயக்கத்தில் தாதர்கீர்த்தி திரைப்படத்தின் மூலம் பெங்காலி திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். பெங்காலியில் பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்த தபஸ் பால் 1984ல் வெளிவந்த அபோத் திரைப்படத்தில் மாதுரி தீக்ஷித் உடன் சேர்ந்து நடித்தார்.
ஹிரன் நாக் இயக்கத்தில் வந்த அந்த சினிமா மாதுரி தீட்சித்தின் முதல் திரைப்படம் என்பது சிறப்பு. தன் முப்பது ஆண்டு நடிப்புத் துறையில் ப்ரோசென்ஜி சட்டர்ஜி, சௌமித்ர சட்டர்ஜி, ராக்கி, மௌசுமி சட்டர்ஜி போன்ற நடிகை நடிகர்களுடன் நடித்துள்ளார். இறுதியாக 2013ல் கிலாடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.
திருணாமுல் கட்சியில் இருமுறை எம்பியாகவும் ஒருமுறை எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 2016ல் சிட்பண்ட் ஸ்காமில் கைதானார். 13 மாத சிறை தண்டனைக்குப் பின் பெயிலில் வெளிவந்தார்.
இவருடைய மரணத்திற்கு பெங்கால் திறைத்துறையினரும் திருணாமுல் கட்சித் தொண்டர்களும் இரங்கல் தெரிவித்தனர்.