December 7, 2024, 7:03 PM
28.4 C
Chennai

சிஏஏ.,வால் தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இல்லை: எடப்பாடி

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தை சொல்லிச் சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சி முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் சிறுபான்மையின மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்படவில்லை எனவும், அப்படி யாராவது ஒரு சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டிருந்தால் கூறுங்கள் அதற்கு பதில் சொல்கிறோம் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், பாதிப்பு ஏற்படுவதால் தான் மற்ற மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறினார்.


அதற்கு பதிலளித்த முதலமைச்சர், CAA விவகாரத்தை சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றி தவறான தகவலை பரப்பி, அமைதியாக உள்ள தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன

ALSO READ:  மாணவியை தண்ணி அடிக்க அழைத்த பேராசிரியர்! அழிவை நோக்கி ஆக்ஸ்போர்ட் சிட்டி!

குடியுரிமைச் திருத்தச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது , அதனை திரும்ப பெறும் அதிகாரம் தங்களிடம் இல்லை என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்