அதுக்காக இப்படியா அடிப்பாங்க! இப்போ கம்பி எண்ணுறாங்க!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
round table school1 - 2026

ஹைதராபாத் சனத்நகரில் பள்ளி மாணவச் சிறுவன் ஒருவனை சாலையில் வைத்து ஒரு தம்பதிகள் வீராவேசம் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

பள்ளி மாணவர்கள் சாலையில் கூச்சலிட்டு பேசிக் கொண்டு செல்கிறார்கள். தங்களுக்கு தொந்தரவாக உள்ளது என்று சாலையில் பலரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த சிறுவனை போட்டு அடித்தார்கள். அடி தாங்க மாட்டாமல் அவர்களின் காலை பிடித்துக்கொண்டு மாணவன் கெஞ்சினாலும் அவர்கள் பரிதாபம் காட்டவில்லை.

அதோடுகூட அந்த பள்ளி மாணவன் மேல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கூட அளித்தார்கள். விஷயம் தெரிந்து கொண்ட பையனின் பெற்றோரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கவே போலீசார் களத்தில் குதித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோது அரசாங்க பள்ளி சீருடையில் இருந்த அந்த மாணவனை அந்த தம்பதிகள் அடித்ததை தெரிந்துகொண்டு போலீசார் அந்த தம்பதிகளை கைது செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது. அரசாங்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பையனை சாலையின் மீது பேசிக்கொண்டே சென்றதற்காக சாலையோரத்தில் இருந்த வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வந்து அடித்து துவைத்தார். சற்றைக்கெல்லாம் வீட்டிற்குள்ளிருந்து கணவனும் வந்து அந்த பையனை முதுகிலும் தலையிலும் போட்டு அடித்தார்கள்.

அந்த பையன் காலை பிடித்துக்கொண்டு கெஞ்சினாலும் கேட்கவில்லை. அதோடுகூட அரசு பள்ளியில் படிக்கும் லேபர் பயலுகளா, என்றெல்லாம் கூட அவர் வாயில் வந்தபடி திட்டியதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.