தேவப்பிரயாகையில் நொடி பொழுதில் உயிர் தப்பிய தலைமை நீதிபதி!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

thevaprayagai - 2026

உத்தரகண்டில் ஆற்றில் புனித நீராட சென்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூலிழையில் உயிர்தப்பினார்.

உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன். இவர் தேவப்பிரயாகை நகரில் சங்கமம் எனும் இடத்தில் நேற்று புனித நீராடினார். அப்போது கால்தவறி அவர் ஆற்றில் விழ முயன்றார். ஆனால் அருகில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அவரை தாங்கி பிடித்து காப்பாற்றினர்.

இதனால் அவர் நீரில் விழாமல் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த இடத்தில் அலக்நந்தா மற்றும் பாகீரதி என்ற 2 ஆறுகள் ஒன்றாக இணைந்து கங்கையாக உருவெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.