சிஏஏ எதிர்ப்புக் கூட்ட அராஜகங்களால்… வெகுண்டெழுந்த கிராம மக்கள்; இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு தொடக்கம்!

Published:

thiruppur permission - 2026

திருப்பூர் அருகே உள்ள மங்கலத்தில் குடியுரிமை எதிர்ப்புப் போராட்டம் எனக் கூறிக்கொண்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தி இந்துக் கடவுள்களை மிகக் கேவலமாகவும், இழிவுபடுத்தியும் பேசி, போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டு வருகிறார்கள்.

மேலும் வெளியூரிலிருந்து வரும் நபர்கள் அப்பகுதி வாழ் மக்களின் பொது அமைதியை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியும் மக்களை அச்சுறுத்தியும் வருகின்றனர். அப்பகுதி கிராம மக்கள் – மங்கலம், கணியம்பூண்டி இடுவாய், புத்தூர் வேலாயுதம்பாளையம், வேலம்பாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சனிக்கிழமை நேற்று மாலை நான்கு மணிக்கு மலைக்கோவிலில் கூடி இத்தகைய சட்ட விரோத அராஜகப் போக்கை கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

thiruppur permission2 - 2026

மேலும் அக்கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து “இந்து பொதுமக்கள் கூட்டமைப்பு “ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதன்மூலம் மங்கலத்தில் நடைபெறும் அனைத்து சட்ட விரோத தேசத்துரோக நடவடிக்கைகளையும் கண்டித்து மக்களைத் திரட்டி போராட உள்ளதாகக் கூறினர்.

ALSO READ:  காணாமல் போன நயா பைசா கணக்கு!

திருப்பூரை அடுத்த பூமலூர் வேலாம்பாளையம் இச்சிப்பட்டி சாமளாபுரம் இடுவாய் நடுவேலம்பாளையம் மங்கலம் செம்மாண்டம் பாளையம் கணியாம்பூண்டி வஞ்சிபாளையம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

இந்தக் கூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை 300க்கும் மேற்பட்டவர்கள் மங்கலத்தை அடுத்த மலைக் கோவில் பகுதியில் இருந்து இரு சக்கர வாகனங்களில் மங்கலம் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலாவிடம் மனு அளித்தனர்

அந்த மனுவில் அனைத்து இந்து இயக்க கூட்டியக்கத்தின் சார்பில் வருகிற 3ம் தேதி மங்கலம் குற்றப் பாறை மாதேஸ்வரன் கோவிலில் இருந்து மங்கலம் நால்ரோடு வரை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்த அனுமதி வேண்டியும் மேலும் பேரணியைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்பு உணர்வு பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்றுக் கோரியிருந்தனர்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img