கொரோனா: ராஜஸ்தானில் அதிவிரைவு டெஸ்ட் எடுக்க முடிவு!

இந்தியா பொது தகவல்கள்
corono 9 - 2026

மகாராஷ்டிராவில் மேலும் 12 பேர் மரணமடைந்துள்ளனர். அதன் மூலம் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. 1,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் கொரோனா கேஸ்கள் 283 ஆக அதிகரிக்க, அதிவிரைவு டெஸ்ட் அங்கு முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தியா கொரோனா வைரஸின் உள்பரவல் நிலையிலிருந்து பெரிய அளவில் பரவும் நிலையான கட்டுப்படுத்த வேண்டிய கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. மேலும் சாதாரண மற்றும் மிகச்சாதாரண கோவிட்-19 கேஸ்களுக்காக கோவிட் கேர் செண்டர்களை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ வசதிகள் முழு மருத்துவ வசதியாக இருக்கலாம், அல்லது மருத்துவமனையில் ஒரு கட்டிடம் இதற்கென்று ஒதுக்கப்படுவதாக இருக்கலாம்.

அதாவது தனி நுழைவாயில், வெளியேற்ற வசதிகள் மற்றும் தனி ஐசியுக்கள் வெண்ட்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கொண்ட தனி வசதியாக இருக்கலாம் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆனால் 21 நாட்கள் லாக்-டவுன் அகற்றப்படுவது குறித்து அல்லது நீட்டிக்கப்படுவது குறித்து எந்த ஒரு தகவலும் உறுதியாக இல்லை.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

இதுவரை இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 11,975 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.