கொரோனா: தொற்று முடிவு இரண்டே மணி நேரத்தில்.. கேரளா சாதனை!

இந்தியா பொது தகவல்கள்
kerala 1 1 - 2026

2 மணி நேரத்திற்குள் முடிவுகளை அறிந்துகொள்ள உதவும் கொரோனா ரேபிட் டெஸ்ட் கருவிகளை கேரள மாநிலம் உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருந்துகளை இல்லையென்றப்போதும், அதன் பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவியை சீனா தயாரித்துள்ளது. அதனை தற்போது அமெரிக்கா, இந்தியா என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இந்தியாவும் தமிழகமும் கொரோனா பரிசோதனை செய்ய ரேபிட் கிட் என்றும் விரைவு சோதனை கருவியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்தது. தற்போது இந்தியாவிலேயே இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம்கொரோனா சோதனை செய்வதற்கான ரேபிட் டெஸ்ட் கிட்களை உருவாக்கியுள்ளது.

இந்த டெஸ்ட் கிட் மூலம் 2 மணி நேரத்திற்குள்ளாக முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தத் தகவலை மக்களிடம் மகிழ்ச்சிகரமாகப் பகிர்ந்துள்ளார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

10 நிமிடங்களில் சோதனை செய்து 2 மணி நேரத்திற்குள் முடிவுகளை அறிந்துகொள்ள உதவும் இந்த சோதனைக் கருவி குறித்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.