கொரோனா: குடியரசு மாளிகை ஊழியருக்கு தொற்று!

இந்தியா பொது தகவல்கள்
kudiyarasu malikai - 2026

தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேமசயம் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,252-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 2,800-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் தில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள 125 குடும்பங்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.