எம்.கல்லுப்பட்டி… கொரோனா விழிப்புணர்வு பணிகளில் இளைஞர்கள்..!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சுய முன்னேற்றம் மதுரை லைஃப் ஸ்டைல்
kalluppatti corona awareness1 - 2026

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா M.கல்லுப்பட்டி கிராமத்தில் கொரானா
தொற்று நோய் விழிப்புணர்வுக்காக தன்னார்வலர்களால் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

தமிழக அரசும் மத்திய அரசும் கொரானா தொற்று நோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து இக்கிராமத்தில் அரசின் அறிவுறுத்தல் படி பல்வேறு விதமான நடைமுறைகளை கையாண்டு தொற்று நோய் மக்களிடம் பரவாமல் இருக்க விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

kalluppatti corona awareness5 - 2026

இக்கிராமத்தில் மளிகை கடை, இறைச்சி கடை , ரேசன் கடை , வங்கி என மக்கள்கூடும் இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது… மேலும் கொரானா தொற்று நோய் பரவாமல் இருக்க மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது… ஊர் எல்லையில் தடுப்பு அமைத்து வெளியூர் நபர்கள் வருவதை கண்காணிப்பது… அவர்களை கிருமி நாசினி கொண்டு கை கால்களை கழுவிய பின் ஊருக்குள் அனுமதிப்பது போன்ற விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஓவியம் ஊர் நடுவில் வரைந்தனர் பின் அதனை மள்ளப்புரம் ஊரட்சி மன்ற தலைவர் சுமதி பெருமாள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி முத்துராமன் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நரஸ் தங்கமணி, திமுக நல்ல தம்பி ,மெடிக்கல் தங்கம் , மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் விழிப்புணர்வு ஓவியத்தை சுற்றி நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பணியில் உதயகுமார் , விருமாண்டி , பிரிதிவிராஜன், ஆனந்த, சுபாஷ், அஜித், நந்தகுமார், சக்திவேல் , செல்வக்குமார், லட்சுமண், அஜய் பாண்டி ,மனோஜ் , ஆகிய தன்னார்வலர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்!

செய்தியாளர்: எம்.பிரித்விராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.