பேஸ்புக்குடன் கைகோத்த ரிலையன்ஸ்: டிஜிட்டல் வர்த்தகத்தின் அடுத்த கட்டம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
ambani reliance - 2026

டிஜிட்டல் வர்த்தகத்தின் அடுத்த கட்ட பரிணாமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் வெளிப்படுத்தியிருக்கிறது. அந்நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துடன் கைகோத்திருப்பதை அறிவித்துள்ளார் அம்பானி.

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை, 43,574 கோடிகளுக்கு சமூக வலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின், தொலைதொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, 9.99% பங்குகளை அமெரிக்க சமூகவலைதள பெருநிறுவனமான ஃபேஸ்புக்குக்கு $5.7 billion., அதாவது 43,574 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், ஜியோ தளங்களின் மிகப்பெரிய மைனாரிட்டி பங்குதாரராக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக்.

இதன்மூலம் வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இன்னும் அழுத்தமாக கால் பதிக்கவிருக்கிறது ஃபேஸ்புக். மேலும் இந்தியன் ஆயில் முதல் தொலைதொடர்பு வரையிலான கடன்களை கணிசமாக குறைக்க உதவுகிறது.

ஃபேஸ்புக் உடனான இந்த பங்கீட்டைக் குறித்து நிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில், “2016-இல் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடங்கியபோது, இந்திய டிஜிட்டல் சர்வோதயாவைக் கொண்டு வரும் கனவுடன் அதைத் தொடங்கினோம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கைத் தரத்துடன், இந்தியாவின் டிஜிட்டல் திறனும் சேர்ந்தே வளரும்போது, இந்தியா சர்வதேச நாடுகளின் முன்னால் டிஜிட்டல் வளர்ச்சியும் பெற்ற நாடாக மிளிரும் என்பதே கனவாக இருந்தது.

இந்தியர்கள் அனைவருக்குமான பயனாகவும், டிஜிட்டல் துறையில் வேகம்பெற்று வளர்வதற்கு ரிலையன்ஸைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் ஃபேஸ்புக்கை, நீண்ட கால பங்குதாரராக வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். நம் மதிப்புக்குரிய பிரதமர் மோடிஜி கண்ட கனவின் படி, டிஜிட்டல் வர்த்தகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம். விவசாயிகள்,மாணவர்கள், ஆசிரியர்கள், வெகுஜன இந்தியர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும் வகையில் இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  'வந்தேமாதர'த்தை மதச் சண்டையாக்க வேண்டாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.