ஆரோக்கிய சேது ஆப் மீது அசதுத்தீன் ஒவைசி விமர்சனம்: அது ஒரு பயனற்ற செயலியாம்!

Published:

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

கரோனா பரவலின் பயங்கரமான பின்னணியில் மத்திய அரசு ஆரோக்கிய சேது ஆப் எடுத்துவந்துள்ளது. இந்த ஆப் ஒவ்வொருவரின் ஃபோனிலும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூட குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த ஆப் மீது எம்ஐஎம் தலைவர் அசதுதீன் ஒவைசி தீவிர விமர்சனம் செய்துள்ளார். அது ஒரு பயனற்ற செயலி என்று விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்த ஆப் பயன்படுத்துவர்களின் டேடா பயனற்றதாக மாறும் ஆபத்து தென்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மிக மிக ஆபத்தானதாக தென்படும் கரோனா வைரசை அரசாங்கம் நம்பத்தன்மை இல்லாத ஆரோக்கிய சேது செயலியைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும் என்று பார்ப்பது துரதிருஷ்டவசமானது என்று அவர் கூறுகிறார்.

இந்த ஆப்பை பயன்படுத்துபவர்கள் தம் தனிப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டி வருகிறது என்றும் அது அவர்களுடைய தனியுரிமைககு பங்கம் விளைவிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

ஆனால் அவர் நேராக மத்திய அரசாங்கத்தின் பெயரை பயன்படுத்தாமல் டெல்லி சுல்தான்களின் பெயர் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதனால் இந்த ட்வீட் மீது சர்ச்சை நடந்து வருகிறது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img