இரவில் நடமாடும் 6 அடி மர்ம உருவம்! வீட்டின் கதவைத் தட்டி… பீதியில் மக்கள்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள்
6 adi - 2026

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கேரளாவில் மிகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் தான் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, சிறந்த முறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கேரளாவில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, இறப்பு விகிதம் குறைவு என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், திருச்சூரில் இரவு நேரங்களில் 6 அடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் மக்களின் முன்பு தோன்றிவிட்டு மறைந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இரவு நேரத்தில் 6 அடி உயரத்திற்கு ஒரு உருவம் வந்து செல்கிறது. வீடுகளின் கதவுகளை தட்டுகிறது. மின்னல் வேகத்தில் நகர்ந்து போகிறது. அந்த உருவத்தின் காலில் சுருள் போன்று ஏதோ ஒன்று இருக்கிறது என்று பீதியுடன் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரவில் அந்த உருவத்தை பார்க்க யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்று கேரள அரசு எச்சரித்துள்ளது. அந்த உருவத்தை பார்க்கும் பட்சத்தில் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை உதவி எண்ணையும் அரசு அறிவித்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.