பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்: கர்நாடகா அரசு!

இந்தியா கல்வி சற்றுமுன்
exam
exam

கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

இந்நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 25 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தேர்வு, ஜூலை மாதம் 4 ஆம் தேதி முடிவடைவதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.