
தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் ரெஃபரல் மருத்துவமனையில் இன்று ராணுவத்தில் பணியாற்றி வரும் வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைவரும் தில்லியில் உள்ள ராணுவத்தின் முகாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த 24 பேரில், இந்திய ராணுவத்தில் பணியாற்றுவோர் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.