
ஆந்திராவில் இன்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு தாக்குதலில் இளம் பெண் ஒருவர் நின்றுகொண்டிருக்கும்போதே மயங்கி விழும் வீடியோ காட்சி ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர் ஆர்வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே இயங்கிவரும் எல்.ஜி.பாலிமர்ஸ் இன்டஸ்ட்ரி என்ற ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரெனெ விஷவாயு காசிவு ஏற்பட்டு திடீரென புகை வெளியேறியது. விஷவாயு கலந்த புகையை சுவாசித்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், இன்று அதிகாலையில் தொழிற்சாலையில் இருந்து கசிந்த ரசயான புகையால் இந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. எங்களுக்கு எங்கே ஓடுவது என்று கூட தெரியவில்லை. இங்கு இருந்த மக்கள் நடந்து கொண்டிருந்தபோதே மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர் என கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்த எதிர்பாராத விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிர் இழந்துள்ள நிலையில், 1000 கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மக்கள் சாலைகளில் மயங்கிக்கிடக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை நடுங்க வைக்கின்றனர்.
இதனிடையே சாலை ஓரத்தில் நின்றுகொண்டிற்கும் இளம் பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழும் காட்சி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ.
#Breaking– #AndhraPradesh – Shocking incident from Vishakapatnam. 3 dead-(which reportedly includes achild.)and more than 200 people fell unconscious after gas leakage from LG Polymersplant. They are shifted to nearby hospitals. Cops on ground trying to get people out of houses. pic.twitter.com/XoaWksIwOf
— Rishika Sadam (@RishikaSadam) May 7, 2020
Scary scenes from #VizagGasLeak #Vizag #Visakhapatnam pic.twitter.com/hefZDopyVU
— Vizag Insight (@vizaginsight) May 7, 2020
Here's an eye witness narrating what happened. He says, "It was early in the morning and looked all foggy. Where do we run to? The entire area was covered with this mist-like chemical. It caused a burning sensation. People were fainting even as they were walking." #Vishakapatnam pic.twitter.com/vzwdKjai3m
— Paul Oommen (@Paul_Oommen) May 7, 2020
Those with breathing difficulty being rushed to hospitals in #Vizag district. @FilterKaapiLive pic.twitter.com/P3kbc3XlhP
— T S Sudhir (@Iamtssudhir) May 7, 2020
Many children among those affected by the #gasleak, being provided first aid. @FilterKaapiLive pic.twitter.com/B5pFOWFyRk
— T S Sudhir (@Iamtssudhir) May 7, 2020