தெலங்காணா மாநில உதய தினம்; களை கட்டிய கொண்டாட்டம்!

Published:

telangana saba
telangana saba

தெலங்கானா சட்டப் பேரவையில் விமர்சையாக தெலங்காணா அவதார தின விழாக்கள். தெலங்காணா மாநில பேரவையில் மாநில அவதார தின விழா கொண்டாட்டங்கள் விமர்சியாக நடந்தேறின. சாசன சபையில் சபாநாயகர் கொடியேற்றினார். மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி கொடி ஏற்றினார்.

தெலங்காணா மாநில அவதார தின கொண்டாட்டங்கள் அசெம்பிளியில் விமரிசையாக நடந்தன. அசம்பபிளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகளுக்கு அசெம்பிளி ஸ்பீக்கர் பொச்சாரம் சீனிவாச ரெட்டி, மண்டலி சேர்மன் குத்தா சுகேந்தர் ரெட்டி மலரஞ்சலி செலுத்தினர்.

அசெம்பிளியில் ஸ்பீக்கர் போச்சாரம் ஶ்ரீனிவாசரெட்டி தேசிய கொடியை பறக்க விட்டார். சாசன மண்டலியில் குத்தா சுதாகர் ரெட்டி கொடியேற்றினார்.

இதன் தொடர்பாக போச்சாரம் சீனிவாச ரெட்டி பேசுகையில் பல பத்தாண்டுகளாக போராட்டம் நடத்தி தெலங்காணாவை சாதித்துள்ளோம் என்றார்.

telangana day
telangana day

தெலங்காணா மக்களின் கனவுகளை முதலமைச்சர் நனவாக்கி உள்ளார் என்றும் அரசாங்கம் மாநில அபிவிருத்திக்காக பாடுபடுகிறது என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

முதலமைச்சர் கேசிஆர் கன்பார்க் அமர வீரர்களின் தூண் அருகில் தேசியக் கொடியை ஏற்றினார் . அதன்பின் பிரகதி பவனில் மூவர்ண கொடியை பறக்க விட்டார். தெலங்காணா பவனில் ராஜ்ய சபை மெம்பர் கே கேசவராவு மூவர்ணக் கொடியேற்றினார்.

கரோனா வைரஸ் காரணமாக தெலங்காணா அவதார தின கொண்டாட்டங்கள் ஆடம்பரமின்றி மக்கள் கூட்டமின்றி நடந்தேறின.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img