தெலங்காணா மாநிலம் உருவான தினம்! களை கட்டிய கொண்டாட்டம்! வாழ்த்திய மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modi speech - 2026

தெலங்காணா மாநில அவதார தினம் இன்று! இதை முன்னிட்டு, இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் மோடி இன்று காலை தனது டிவிட்டர் பதிவில் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

வெங்கையா நாயுடு, தெலங்காணா மந்திரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இரு தெலுங்கு மாநிலங்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ட்விட்டர் மூலமாக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நரேந்திர மோடி தெலங்காணா மாநில மக்கள் பலதுறைகளிலும் திறமையை காட்டி உள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தில் தெலங்காணா மாநிலம் முக்கியமான இடம் வகிக்கிறது என்றும் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

தெலங்காணா மக்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் பெருமைக்கும் நான் இறைவனை வேண்டுகிறேன் என்று தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

இன்று இரண்டு மாநிலங்கள் புது மாநிலங்களாக ஏற்பட்ட நாள் என்று வாழ்த்தியுள்ளார்.

அதன்பின் ஆந்திரபிரதேச மாநில மக்களுக்கு கூட வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி உழைப்பு மற்றும் விடா முயற்சியே இந்த கலாச்சாரத்தின் மறுபெயர் என்று குறிப்பிட்டுள்ளார். நாட்டு முன்னேற்றத்தில் ஆந்திரப்பிரதேச மாநிலம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அவர் விவரித்துள்ளார். ஆந்திரபிரதேச மாநில மக்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைய வேண்டும் என்று கோருகிறேன் என்றும் மற்றுமொரு ட்விட்டர் செய்த நரேந்திர மோடி ஆந்திர பிரதேச மாநில மக்களுக்கு கூட வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று தெலங்காணா ஆந்திர பிரதேஷ் இரண்டு மாநிலங்களாக பிரிந்து புது மாநிலங்களாக அவதரித்த நாள் ஆனதால் இரண்டு மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
venkaiya naidu
venkaiya naidu

இதே நேரத்தில் தெலங்காணா மாநில மக்களுக்கு உப ராஷ்டிரபதி வெங்கையா நாயுடு தெலங்காணா மாநில அவதார தின விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். தெலுங்கு இங்கிலீஷ் ஹிந்தி மூன்று மொழிகளிலும் டிவீட் செய்த உப ராஷ்டிரபதி வெங்கையா நாயுடு தெலங்காணாவின் வரலாறு மிகவும் பெருமைக்குரிய வரலாறு என்று போற்றினார். இயற்கை வளங்களோடு வேற்றுமையில் ஒற்றுமை எதிரொலிக்கும் தெலங்காணா என்று புகழ்ந்துள்ளார்.

பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பெருமையோடு நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு வகிக்கும் தெலங்காணா மாநிலம் மேலும் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கோருகிறேன் என்று வெங்கையாநாயுடு தெலங்காணா அவதார தின விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தெலங்காணா மாநிலத்தில் அவதார தின விழா தொடர்பாக தெலங்காணா அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் அன்றைய போராட்டத்தின் நினைவுகளை நினைவு படுத்திக் கொண்டார்கள். அமரர்களின் தியாகங்களுக்கும் லட்சியங்களுக்கும் ஏற்ப தெலங்காணா முன்னேற்றம் சாதித்து வருகிறது என்று அமைச்சர் தன்னீரு ஹரிஷ் ராவ் புகழாரம் சூட்டினார். முதலமைச்சர் கேசிஆர் சாகும்வரை உண்ணாவிரத தீட்சை அறிவித்து மத்திய அரசை ஒப்புக்கொள்ளச் செய்து தெலங்காணா மாநிலத்தை சாதித்தார் என்று புகழ்ந்தார். பாரத நாட்டிற்கு தெலங்காணா ஒரு ஆதர்ச மாநிலமாக நிற்கும் என்று அவர் தெரிவித்தார்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!
telangana minister
telangana minister

மறுபுறம் அமைச்சர் எர்ரபெல்லி தயாகர் ராவு போராட்ட குணத்தோடு கூட தெலங்காணா முன்னேற்றமும் அடையும் என்றும் கேசிஆரின் போராட்டத் திறமை, விடாமுயற்சி அமரர்களின் பலிதானங்கள் காரணமாகவே தெலங்காணா மாநிலம் வடிவம் பெற்றது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.