
இன்று தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் அரசியல்வாதியுமான சிரஞ்சீவி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இன்று தெலங்காணா மாநில அவதார தின உற்சவம் தொடர்பாக தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன. ட்விட்டரை மேடையாக கொண்டு அரசியல், சினிமா, பிரமுகர்கள் மாநில அவதார தின விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வரிசையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தெலங்காணா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பல அமர வீரர்களின் தியாகங்களின் நினைவாக பலநாள் கனவை நிறைவேற்றிய மக்களின் இதயங் கவர்ந்த தலைவர் கேசிஆர் அவர்களுக்கும் தெலங்காணா மாநில மக்களுக்கும் பங்காரு தெலங்காணா அவதார தின உத்ஸவ வாழ்த்துக்கள் என்று சிரஞ்சீவி ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கும் சிரஞ்சீவி பர்த்டே விஷஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தின் ஆளுமையே !
தெலங்கானாவின் ஆளுநரே !

ஆளுநர் சிம்மாசனம் அழகு பெற்றது உம்மால்….
ஆளுநர் என்பவர் அதிகார வர்க்கம் அல்ல என்றுணர்த்தி,
மக்களொடு மக்களாய் மக்களின் மனதில் பதிவுற்றாய் பண்புடனே !
தினம் தினம் ஓர் நிமிடத்தில், ஓராயிரம் உள்ளங்களை ஒளி பெறச் செய்கின்றீர் – உன்னதமாய் !
கதிர் நெல்லுக்கு கதிரவன் போல்,
என் சொல்லுக்கு ஒளி கொடுத்து – என்னை உலகறிய செய்(த)தாயே!
தெலுங்கானா மாநிலத்தில் தமிழ் மக்கள் தவித்திருந்தபோது துயர் போக்கி தாயகம் அனுப்பிட்ட அன்னையே !
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வணங்குகிறேன் உன்னையே !
இன்று தமிழும் (DR. தமிழிசை அவர்களும்) ,தெலுங்கும் (தெலுங்கானாவும்) ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடுவது ஓர் கூடுதல் மகிழ்வு !
உமக்கும், உம் கீர்த்தியால் நலமுறும்
தெலுங்கானா மாநிலத்திற்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
- அ.அஸ்வத்தாமன் ,பாஜக