அடிச்சா இப்படி அடிக்கணும் அதிர்ஷ்டம்..! அமேசானின் அமேசிங் டெலிவரி!

இந்தியா லைஃப் ஸ்டைல் வணிகம்
ameson

கவுதம் ரெஜி என்பவர் அமேசானில் ஆர்டர் செய்த ஸ்கின் லோஷனுக்கு பதிலாக ரூபாய் 19,000 மதிப்புள்ள போஸ் ஹெட்போன்ஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

ஜோஷ் சாஃப்ட்வேர் என்ற நிறுவனத்தின் இயக்குநராக கெளதம் ரெஜி 300 ரூபாய் மதிப்புள்ள ஸ்கின் லோஷன் ஒன்றை அமேசான் இணையதளத்தில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரி ஆனபோது அமேசான் அனுப்பிய பார்சலில் 19,000 ரூபாய் மதிப்புள்ள உயர்தர போஸ் ஹெட்போன்ஸ் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்பு அவர் அமேசானை தொடர்புகொண்டு இதை பற்றி தெரிவித்தபோது , அமேசான் தரப்பில் இந்த ஹெட்போன்ஸ் திருப்பி அனுப்ப முடியாதது (non-returnable) என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதை ரெஜி ட்விட்டரில் குறிப்பிட்டவுடன் அந்த ட்வீட் 1500 முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது . மேலும் 6000 லைக்குகளையும் பெற்றுள்ளது . அதே போல் கமெண்ட்ஸ் பகுதியில் இது போல் அமேசானில் ஆர்டர் செய்ததற்குப் பதிலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்யப்பட்ட கதைகளைப் பலரும் பகிர்ந்துகொண்டுள்ளனர் .

அதில் கல்யான் கந்தாப்பு என்ற ஒரு அமேசான் வாடிக்கையாளர் கம்பூயூட்டர் மானிட்டர் திரை ஒன்றை 13,000 ரூபாய்க்கு ஆர்டர் செய்தபோது அவருக்குக் கோலின் பாட்டில் டெலிவரி செய்யப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார் .

டெபாஷிச் திரிபாதி என்பவர் ஆஃப்டர் ஷேவ் லோஷன் ஆர்டர் செய்து , அவருக்கு லெனோவா டாப் டெலிவரி செய்யப்பட்டதைப் பகிர்ந்துகொண்டுள்ளார் .

மறுபுறம் அக் ‌ ஷய் மாத்துர் என்பவர் அமேசான் திரும்பப் பெறவில்லை என்றாலும் நஷ்டம் அமேசானுக்கல்ல , அதை அமேசானில் விற்ற விற்பனையாளருக்கே எனத் தெரிவித்துள்ளார் . மேலும் ஆர்டரில் பிரச்சினை என்பதால் அந்த விற்பனையாளருக்கு அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.