
மதுரை விமான நிலையத்தில் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி சுரேந்திர சிங் மறைவிற்கு இந்தோ திபெத் பாதுகாப்பு படை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் கடந்த 3 தினங்களுக்கு முன் தில்லியில் இருந்து மதுரை வந்த சுரேந்தர் சிங் (வயது 50) மதுரை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் முதலுதவி செய்து சொக்கிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு இந்தோ – திபெத் முகாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அவரது சொந்த ஊரான அரியானா மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறது.
இதற்காக மதுரை விமான நிலையத்தில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் சதிஸ் குமார் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி கமாண்டண்ட் சனிஸ் மற்றும் வீரர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை