December 6, 2025, 4:00 AM
24.9 C
Chennai

புரோட்டாவுக்காக வரிந்து கட்டிய டிவிட்டரியன்ஸ்! 18% ஜிஎஸ்டி.,யா என ஆதங்கம்?

parotta
parotta

ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி வரி; புரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரியா? ரொட்டி புரோட்டா இல்லியா? என்று பரோட்டாவுக்கு ஆதரவாக நேற்று டிவிட்டர் பதிவுகளில் பொங்கித் தள்ளிவிட்டார்கள் மக்கள். பெரும்பாலான பதிவுகள் கேரளத்தில் இருந்தே ட்ரெண்ட் ஆகின.  

பரோட்டாவுக்கு ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் #HandsOffPorotta ஹேஸ்டேக் நேற்று ட்ரெண்ட் ஆனது. 

தென் இந்திய மாநிலங்களில் புரோட்டா இப்போது அதிகம் பேரால் உண்ணப்படுவது. கேரளத்தில் பிரபலமான ஒன்று. கடைகோடி கிராமங்களில் உள்ள ஓட்டல்கள் முதல் மாநகர ஸ்டார் ஓட்டல்கள் வரை புரோட்டா ஒரு ஸ்பெஷல் ஐட்டம். என்னதான் மைதா மாவு உடலுக்கு நல்லதல்ல, புரோட்டா தயாரிப்பில் ஈடுபடுத்தப் படும்  எண்ணெய், மைதா உண்டால் அதிக அளவில் இதய நோய் ஏற்படும், செரிமானக் கோளாறுகள் கண்டு வயிற்று நோய் வரும் என்றெல்லாம்  ஆய்வுகளும் விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டாலும் அதை எல்லாம் மக்கள் எவரும் கண்டுகொள்வதில்லை காரணம் புரோட்டா சுவையின் மீதுள்ள விருப்பம்தான்! 

இந்நிலையில் புரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது தற்போது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ரொட்டிக்கு 5% ஜிஎஸ்டி., புரோட்டாவுக்கு மட்டும் 18% வரி ஏன் என இணையவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த ‘ஐடி பிரெஷ் ஃபுட் என்ற நிறுவனம், ஜிஎஸ்டி சம்பந்தமான புகார்களை விசாரணை செய்யும் Authority for Advance Rulings அமைப்பிடம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், ரொட்டிக்கு 5% வரி எனும்போது அதே பிரிவு உணவு வகையான புரோட்டாவுக்கு 18% வரி ஏன்? எனக் கேள்வி எழுப்பியது. 

இது தொடர்பான விசாரணையின் தீர்ப்பில் புரோட்டா உயர்தர உணவு வகைகளில் வருவதாகவும், இது சப்பாத்தி, ரொட்டி வகையில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புரோட்டக்களை 4-5 நாட்கள் வைத்திருந்து பின்னர் சூடு செய்தும் சாப்பிடலாம் என்பதால் அதற்கு வரி அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் புரோட்டா, ட்விட்டரில் ட்ரெண்டானது. #HandsOffPorotta என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்த புரோட்டா பிரியர்கள்,  தாங்கள் புரோட்டா சாப்பிட்ட  படங்களைப் பதிவிட்டு புரோட்டா மீதுள்ள தங்களின் பிரியத்தை வெளிப்படுத்தினர். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories