
புதுதில்லி:
போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுகல் செல்கிறார் மோடி. இன்று காலை அவர் தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
முதல் நாடாக, போர்ச்சுக்கல் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அண்டோனியா கோஸ்டாவை சந்திக்கிறார். அப்போது இரு தரப்பிலும் இருந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். இது, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் மட்டுமின்றி, அமைச்சர்கள், அந்நாட்டு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரையும் மோடி சந்தித்து பேசுகிறார். பிறகு அவர் 27ஆம் தேதி நெதர்லாந்து செல்கிறார். இந்தப் பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது, சுமுகமான உறவு பேணப் படுகிறது என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர், பேஸ்புக் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.
My visit to Netherlands seeks to boost bilateral ties & deepen economic cooperation. https://t.co/93n4vjDRxb
— Narendra Modi (@narendramodi) June 23, 2017
My USA visit is aimed at deepening ties between our nations. Strong India-USA ties benefit our nations & the world. https://t.co/UaF6lbo1ga
— Narendra Modi (@narendramodi) June 23, 2017




