கொரோனா: தாய்க்காக முதல்வரிடம் உதவியும்.. கிடைத்ததற்கு நன்றியும் தெரிவித்த நடிகை!

இந்தியா சற்றுமுன் சினிமா
deepika

கொரோனா வைரஸின் தாக்குதலுக்கு திரையுலகின் குடும்பத்தார்களும் நடிகைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பாலிவுட் மற்றும் சின்னத்திரைகளில் பிரபலமான மோகன குமாரி சிங் மற்றும் அவரது குடும்பத்தார் கொரோனவால் பாதிக்கப்பட்டனர்.

தில்லியில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை தீபிகாசிங் கூட்டுக் குடும்பமாக 45 பேர் பேருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தீபிகாசிங் தாயாருக்கு திடீரென கொரோனா தொற்று பரவியதை அடுத்து தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயாரின் நிலை குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார்.

deepika

தனது தாயாரின் மருத்துவ நிலை மற்றும் அறிக்கையை தருமாறும் அதன் பின்னர் தான் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடியும் என்றும் தீபிகா சிங் தரப்பிலிருந்து கேட்டதற்கு மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் தரவில்லை. அதனால் முதல்வர் மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்து ட்விட்டரில் உதவி கேட்டுள்ளார்.

தேவையான மருத்துவ உதவிக் கிடைத்தை அடுத்து தில்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எனது ட்வீட் மற்றும் வீடியோவுக்கு உடனடியாக பதிலளித்த தில்லி அரசு மற்றும் சுகாதார அமைச்சருக்கு நன்றி. கடைசியில் என் அம்மாவுக்கு சர் கங்காரம் மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது. அவள் விரைவாக குணமடைவாள் என்று நம்புகிறேன் என்று இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்

deepika

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.