போனாலு பண்டிகையை நிறுத்தினால் விபரீதம் ஏற்படும்! எச்சரிக்கிறார்கள்!

Published:

bonalu function telangana
bonalu function telangana
  • முதல்வர் கேசிஆருக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்.
  • போனாலு பண்டிகை யை நிறுத்தினால் அனர்த்தங்கள் நிகழும்… எச்சரிக்கை.

தெலங்காணாவில் போனாலு கொண்டாட்டங்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு உண்டு. ஆஷாட மாதம் வந்தது என்றால் போதும்… செகந்திராபாத் உஜ்ஜயினி மகாகாளி ஆலயத்தில் போனாலு பண்டிகை களை கட்டத் தொடங்கிவிடும். அதன்பின் பாக்கியநகரத்தில்… அதன்பின் ஒவ்வொரு கிராமத்திலும் போனோம் தயாரித்து அம்மனுக்கு படைப்பார்கள்.

ஆனால் கரோனாவால் இந்த ஆண்டு போனாலு பண்டிகை கொண்டாட்டங்கள் நிர்வகிப்பது கடினமானது. ஆனால் போனாலு செய்யத்தான் வேண்டும் என்கிறார் காங்கிரஸ் சீனியர் தலைவர் வீ. ஹனுமந்தராவு.

முதலமைச்சர் கேசிஆருக்கு கடிதம் எழுதிய அவர் போனாலு பண்டிகையின் மீது நிபந்தனைகள் போட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தேவை என்றால் போத்தராஜு, பலகாரம் வண்டி… இவற்றை மட்டும் நிறுத்தி வையுங்கள். ஆனால் பெண்கள் அம்மனுக்கு போணம் சமர்ப்பிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தரவேண்டும்.

போனம் சமர்ப்பித்தால் தான் கரோனா போகும். கடந்த காலத்தில் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்ததால் தான் பிளேக் வியாதி குறைந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. போனாலு நிறுத்தி வைத்தால் அனர்த்தங்கள் நிகழும். அம்மனுக்கு கோபம் வந்தால் பிரளயம் வரும் என்று முதலமைச்சரின் பார்வைக்கு எடுத்துச் சென்றார் விஹெச்.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img