அதிக விற்பனையில் பிரதமரின் படம் அச்சிடப்பட்ட முககவசம்!

Published:

modi mask

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகள் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முகக்கவச விற்பனை சூடு பிடித்துள்ள நிலையில், மக்களை கவரும் வகையில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் தற்போது சந்தைக்கு வந்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது இந்த வகை முகக்கவசங்களின் விற்பனை அமோகமாக உள்ளது. இதுவரை சுமார் 500 முதல் 1000 மோடி புகைப்படம் அச்சிடப்பட்ட முகக்கவசங்களை விற்பனை செய்துள்ளதாக போபாலில் உள்ள ஜவுளிக்கடைக்காரரான குணால் பரியானி என்பவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் படம் அச்சிடப்பட்ட முகக்கவசங்களுக்கு மத்தியப் பிரதேசத்தில் நல்ல வரவேற்பு உள்ளதாக கூறியுள்ள அவர், ராகுல் காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோரின் படங்களுடன் கூடிய முகக்கவசவங்களும் விற்பனைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

modi mask

ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் முகக்கவசம் அணிவதை மாநில அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. பொது இடங்களில் முகக்கவசங்களை பயன்படுத்துவது கட்டாயமாக இருந்தாலும், வங்கிகள் மற்றும் நகைக்கடைகளுக்கு வருபவர்களிடம் 30 விநாடிகளுக்கு முகக்கவசங்களை அகற்ற வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் முகம் பதிவாகும்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img