கர்ப்பமான மகளை விற்க பேரம் பேசிய பெற்றோர்!

இந்தியா கிரைம் நியூஸ்
karppam

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் ஷினோர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் விகாஸ் வாசவா என்பவருடன் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகியுள்ளார். சிறுமி கர்ப்பமாகியதை அடுத்து அவரை அவரது பெற்றோர்கள் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.

மேலும் விகாஸ் வாசவாவிடம் ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதன்படி 50,000 ரூபாய்க்கு சிறுமியை விலை பேசியுள்ளனர். சிறுமியும் தனக்கு பிடித்தவனுடனே செல்ல இருப்பதால் பெற்றோரின் ஒப்பந்தம் குறித்து கவலை கொள்ளாமல் அதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் உறவினர்கள், சிறுமியின் பெற்றோரிடம், ரூ.50,000 மிகவும் குறைவான பணம் என்றும், விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் கேட்க்கும்படியும் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் சிறுமியின் பெற்றோரும் விகாஸிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். ஆனால் விகாஸ் சாதாரண தொழிலாளி என்பதால் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர் 5 லட்சம் ரூபாய் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளனர். இதனால் விகாஸ், சிறுமியை அவரது வீட்டிற்கே செல்லும் படி கூறியுள்ளார். இதனால் கோபமுற்ற சிறுமி தனது பெற்றோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சிறுமியின் பெற்றோர் மற்றும் விகாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கர்ப்பமான சிறுமியை பத்திரமாக காப்பகத்தில் அனுமதித்தனர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.