07 May 11  train

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாகி வருவதால் பொது போக்குவரத்து சேவைகளை மத்திய அரசு முற்றிலுமாக தடை செய்தது. பின்பு புலம் பெறும் தொழிலாளர்கள் , கொரோனா பாதிப்பால் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சாலை மார்கமாக நடை பயணமாக சென்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு இதற்காக சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பின்பு தொற்று அதிகம் பரவல் காரணமாக தற்காலிகமாக சிறப்பு ரயில்களை ரத்து செய்தது.

இந்நிலையில் அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் தட்கல் டிக்கெட்டுகளை கவுண்டரில் இன்று முதல் முன் பதிவு செய்யலாம் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் இயங்கும் அனைத்து 200 ஷ்ராமிக் ரயில்களுக்கும், மே 12 முதல் இயங்கும் அனைத்து ராஜதானி ரயில்களுக்கும் இந்த சேவை கிடைக்கும்.பயணிகள் காலை 10 மணி முதல் ஏசி ரயில்களுக்கும், காலை 11 மணி முதல் ஸ்லீப்பர் வகுப்பிற்கும் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் முன்பதிவு ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திலும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே முன்பதிவு முறை காலத்தையும் (ஏஆர்பி) 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்தியுள்ளது. இது அனைத்து சிறப்பு ரயில்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending