பிரதமர் லடாக்கில் ஆய்வு! ராஜ்நாத் சிங் நன்றி!

Published:

modi ladak

லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி லடாக்குக்கு நேரில் சென்று, ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்திய எல்லையில் வழக்கம் போல் சீன ராணுவம் வாலாட்டும் நிலையில், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் சீனர்களை விரட்டி அடிக்க இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தச் சம்பவம் இந்தியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சீனாவுக்கு எதிரான மனநிலையை இந்திய மக்களிடம் ஏற்படுத்தியது. இதை அடுத்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்திய எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆய்வு செய்து வருகிறார்.

படையினரிடையே பிரதமர் மோடி உரையாற்றிய பின்னர் வீரர்கள் அனைவரும் “வந்தே மாதரம் வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பினர்

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்நிலையில் பிரதமர் மோடியின் லடாக் பயணம் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்குவித்தது நிச்சயமாக இராணுவத்தினரின் மன உறுதியை உயர்த்தியுள்ளது எனவும் இந்த நடவடிக்கைக்கு நான் பிரதமரைப் பாராட்டுகிறேன் அவருக்கு நன்றி எனவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் இன்று லடாக் பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், ரஷ்யாவில் இருந்து தாமதமாகத்தான் ராஜ்நாத் சிங் திரும்பியிருந்தார் என்பதால் அவரது பயணம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், பாதுகாப்பு அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப் பட்டாலும், திட்டமிடப்பட்ட லடாக் பயணத்தை தாம் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img