கொரோனா: ஒரே நாளில் அதிக இறப்பு பட்டியல்! இந்தியா இரண்டாம் இடம்!

இந்தியா சற்றுமுன்
corono

உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலக அளவில் இதுவரை 1.17 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 5.4 லட்சம் பேர் உயிரிழந்தள்ளனர், 66.4 லட்சம் பேர் குணடைந்துள்ளனர்.

உலகிலேயே அதிக பாதிப்பை கொண்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 30.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.32 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டாவது, மூன்றாவது இடங்கள் முறையே பிரேசில், இந்தியா உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் உலக நாடுகளிலேயே இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 49,458 பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்தபடியாக இந்தியாவில் 22,510 பேரும், பிரேசிலில் 21,486 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஒரே நாளில் அதிக இறப்புகளை பதிவு செய்த நாடுகளில் பிரேசில் (656 இறப்பு) முதலிடத்திலும், இந்தியா (474 இறப்பு) இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா (360 இறப்பு) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.