கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

இந்தியா சற்றுமுன்
corona

கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் சூழ்நிலையில் நாளை மத்தியக்குழு தமிழகம் வருகிறது.

தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. நேற்று 3,827 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 1,14,978 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

arthi akuja

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா இருக்கிறது. இந் நிலையில் பெங்களூருருவில் இருந்து விமானம் மூலம் நாளை தமிழகம் வருகிறது மத்தியக்குழு .

இக்குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துகிறது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார். தமிழகத்தில் தொற்று பரவல், கொரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்து இந்த குழு ஆய்வு நடத்துகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.