
மதுரை: மதுரை மேற்கு மாவட்ட ம், திருமங்கலம் நகர் பா.ஜ.க. சார்பாக மத்திய அரசு 9-ம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம், திருமங்கலத்தை அடுத்த சந்தைப்பேட்டையில் நடைபெற்றது .
நகரத் தலைவர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை மேற்கு மாவட்டத்
தலைவர் சசிகுமார், மாநில பொருளாதாரம் பிரிவு தலைவர் எம். எஸ் .ஷ பொருளாதார பிரிவு நிரஞ்சன், மாவட்டச் செயலாளர்கள் சின்னசாமி, தமிழ்மணி, ஆன்மீகப் பிரிவு மாரிமுத்து, கூட்டுறவு பிரிவு முனியாண்டி ஆகியோர் அழைப்பாளர்களாக வந்திருந்தனர்.
சசிகுமார், மத்திய அரசு 9 ஆண்டுக்கான திட்டங்களை எடுத்துரைத்தார்.
திமுக அரசாங்கம் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. குறிப்பாக, மதுரை மாவட்ட எல்லைகளில் சட்ட விரோத மணல் குவாரிகளை செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதைக் கண்டு கொள்ளாமல் திமுக அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது என்று, விமர்சித்தார்.
மண்டல் நிர்வாகிகள் சக்திவேல் ,தங்கம், நீலமேகம், சுந்தர்ராஜ், புஷ்பராஜ், மருதுபாண்டி, துரைமுருகன் ,செல்வ லட்சுமி, ரோஸ் லதா, இன்பராணி மாலா மற்றும் திருமங்கலம் நகர் பாஜகவினர் கலந்து கொண்டனர்.