hipo

நீர்யானைக்கு ஒருவர் பல் துலக்கிவிடும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

செல்லப்பிராணிகளான நாய், பூனை போன்றவற்றிற்கு சில பல் துலக்கிவிடுவதுபோன்ற வீடியோக்களை இணையத்தில் அதிகம் பார்த்திருப்போம். ஆனால், விலங்கியல் பூங்காக்களில் இருக்கும் காட்டு விலங்குகளுக்கு பல் துலக்குவதையோ அல்லது உணவு ஊட்டிவிடுவதையோ பெரும்பாலானோர் பார்த்திருக்கமாட்டார்கள்.

அப்படி இருக்கையில், மிகவும் பெரிய விலங்கான நீர்யானைக்கு ஒருவர் பல் துலக்கிவிடும் வீடியோ இணையவாசிகளை ஆச்சரியமடையச்செய்கிறது. Nature Is Lit என்ற டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. ஒரு நிமிடமே இருக்கும் அந்த வீடியோவை இதுவரை 6.4 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

வீடியோவைப் பதிவு செய்த அவர்கள், “உலகிலேயே மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றான நீர்யானையின் பற்களை சாதாரணமாக துலக்கிவிடுகிறார்” என்பதுபோல குறிப்பிட்டிருந்தனர். வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே பலர் அந்த வீடியோவைப் பார்த்து ரசிக்கத்தொடங்கிவிட்டர். அந்த வீடியோ, விலங்கியல் பூங்காவில் எடுக்கப்பட்டதுபோல தெரிகிறது.

hipo

அந்த வீடியோவில், ஒருவர் நெருங்கி வருவதைக் கண்டவுடன் அந்த நீர்யானை, அதன் முகத்தை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்துக் காட்டுகிறது. கையில் ஒரு பெரிய பிரஷ்-ஐ வைத்திருக்கும் அந்த நபர், பாறையின் நுனியில் அமர்ந்து, அந்த நீர்யானையின் பற்களை துலக்கிவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

இவை அனைத்துமே மிகவும் சுமூகமாக நடக்கிறது, அந்த நபர், முதலில் தனது கைகளால் நீர்யானையின் ஈறுகளைத் தேய்த்து, பின்னர் அதன் பற்களை துலக்கத் தொடங்குகிறார். இவை அனைத்தும் செய்து முடியும்வரை அந்த நீர்யானை மிகவும் அமைதியாக இருக்கிறது. இதனைப் பார்த்த பலர் ஆச்சரியமடைந்து கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending