நான் உயிரோடுதான் இருக்கேன், வேலை கொடுங்க: கெஞ்சிய பெண்! கோல்மால் அதிகாரிகள் அதிர்ச்சி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
lady petition for job
lady petition for job
  • உயிரோடுதான் இருக்கேன், சார்! வேலை கொடுங்க, ஐயா!
  • அதிகாரிகளுக்கு பெண் அளித்த அதிர்ச்சி.
  • உயிரோடு இருக்கும் பெண்ணின் பெயரில் டெத் சர்டிபிகேட்…
    அவர் பெயர் மீது வேறு ஒரு பெண்ணிற்கு வேலை.
  • விஷயம் வெளியே தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.
  • இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்து வரும் நெல்லூர் கார்ப்பரேஷன் அதிகாரிகள்.

ஒரு சுகாதாரத் தொழிலாளிக்கு நினைத்துப் பார்க்க முடியாத அனுபவம் ஏற்பட்டது. அவர் உயிரோடு இருந்தாலும் அவருக்கு பதிலாக வேறொரு பெண்ணுக்கு வேலை கொடுத்தது பரபரப்பாக மாறியது.

நெல்லூரில் நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்தது. நெல்லூர் கார்ப்பரேஷனில் 2012ல் பணியில் சேர்ந்த கிருஷ்ணம்மா என்ற பெண், சுகாதாரத் தொழிளாளராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சில மாதங்கள் சுகாதார பணிக்கு செல்லவில்லை.

அதனை கவனித்த சுகாதாரத் துறையில் உள்ள ஓர் ஊழியர் கிருஷ்ணம்மாள் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ்கள் தயாரித்தார். கிருஷ்ணம்மாவின் மகள் என்று சொல்லி சுகாதாரத் தொழிலாளராக வேறொரு பெண்ணை நியமித்தார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

சில நாட்களுக்குப் பிறகு கிருஷ்ணம்மா உடல்நிலை சரியாகி பணியில் சேரச் சென்றபோது இந்த விஷயம் வெளிப்பட்டது. அவருடைய இடத்தில் வேறொரு பெண்ணை நியமித்து விட்டோம் என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். வேறு வழியின்றி அவர் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன் அவர் மீண்டும் கார்ப்பரேஷன் அலுவலகத்துக்குச் சென்றார். முனிசிபல் ஹெல்த் ஆபீசர் வெங்கட்ரமணாவிடம் தன் பிரச்னையை எடுத்துக் கூறினார். உடனே அவர் கிருஷ்ணம்மா முன்பு பணிசெய்த ரெக்கார்டுகளை எடுத்து ஆராய்ந்தார். 2012ல் அப்போது பணிபுரிந்த ஊழியர்கள் செய்த அக்கிரமங்கள் வெளிப்பட்டன.

உயிரோடு இருக்கும் அவரை இறந்து விட்டதாக போலிச் சான்றுகள் தயாரித்து அவருடைய இடத்தில் வேறொரு பெண்ணை சுகாதாரத் தொழிலாளியாக பணியில் நியமித்து இருப்பது தெரிந்தது. கிருஷ்ணம்மாவின் மகள் என்று கூறி ரமாதேவி என்ற பெண்ணை சுகாதார தொழிலாளியாக நியமித்து இருப்பது தெரிய வந்தது.

இந்த சம்பவத்தின் பின்னால் அப்போது இருந்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு இருக்கும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தின் மீது எம்ஹெச்ஓ வெங்கட்ரமணா விசாரித்து வருகிறார். இதன் மீது வழக்கு பதிவு செய்து கிருஷ்ணம்மாவுக்கு தகுந்த நீதி கிடைக்கும்படி செய்வோம் என்று தெரிவித்தார்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.