கனமழைக்கு வாய்ப்பு: கடலுக்கு செல்ல தடை! வானிலை ஆய்வு மையம்!

சற்றுமுன் தமிழகம்
rain

வெப்பச்சலனம் காரணமாக 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழையும், எஞ்சிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 16ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.