download 1 - 2026

முன்னாள் அமைச்சருக்கு நிபந்தனை ஜாமீன்…

சற்றுமுன்

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாருக்கு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம்.நிபந்தனை ஜாமின் வழங்கியது

download 1 - 2026

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது, சென்னை மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி ஒன்றில், கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி தி.மு.க., பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கிய வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், திருச்சி கன்டோமெண்ட் போலீஸ் ஸ்டேசனில் 2 வாரங்கள் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இன்று ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.