டிரைவரை காதலித்த பெண்! பணக்கார தந்தையால் பறிபோன உயிர்!

இந்தியா கிரைம் நியூஸ்
yaswanth

தனது மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பணக்காரத் தந்தை, மகளின் காதலனை கொலை செய்த சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

யஷ்வந்த் என்பவர் புனேவில் கட்டிடங்கள் கட்டும் கான்ட்ராக்டர் ஆக இருக்கின்றார். அவருக்கு 19 வயதில் மகள் ஒருவர் இருக்கின்றார். அவருடைய 19 வயதில் மகளுக்கு டிரைவர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அவர், பெண்ணின் காதலனான டிரைவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.

இதனால், அந்த பணக்கார தந்தை தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து, அந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு இருக்கின்றனர். ஆனால், அவர் உயிரிழக்காத காரணத்தால் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்து உடலை அங்கிருக்கும் ஒரு காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்று போட்டு விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

மறுநாள் அப்பகுதியில், வசித்தவர்களால் இளைஞனின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது, இந்த தகவலின் பேரில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலை செய்த தொழிலதிபர் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரையும் கைது செய்து இருக்கின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.