முதல் முத் தலாக் வழக்கு… பதிவு!

Published:

triple-talaq-case-registers
triple-talaq-case-registers

தெலங்கானாவில்… ராச்சகொண்டா போலீஸ் கமிஷனரேட் எல்லையில் உள்ள எல்பி நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஞாயிறு அன்று முதல் முத்தலாக் வழக்கு பதிவானது.

போலீஸார் கூறியது என்னவென்றால்… மகபூப்நகர் மாவட்டம் மல்லப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த அப்துல் சமி ராஜேந்தர் நகர் பிஹெச்சி டிபி பிரிவில் லேப் டெக்னீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். 2016 ல் இவருக்கு ஹஸ்தினாபுரம் ஓம்கார் நகரைச் சேர்ந்த ஹஸீனாவோடு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

ஆனால் கடந்த சில நாட்களாக அப்துல்சமியுடன் சேர்ந்து கொண்டு, அவருடைய தாய் அன்வரீ பேகம், நாத்தனார் பர்வீன் ஆகியோர் மேலும் வரதட்சனை வேண்டுமென்று ஹசீனாவை கொடுமை செய்துள்ளனர்.

இதனால் ஹசீனா 2019 செப்டம்பரில் ராஜேந்தர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். பெரியவர்கள் முன்னிலையில் அவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. அதன் பிறகு அவர்கள் ஹஸ்தினாபுரத்தில் குடி மாறினார்கள்.

ஆனால் கடந்த மார்ச் 25 ஹசீனாவோடு சண்டையிட்ட சமி மனைவிக்கு தலாக் கொடுத்து அவரை பிறந்த வீட்டில் விட்டுச் சென்றுவிட்டார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதனால் ஹசீனா கடந்த ஜூன் 26 வனஸ்தலிபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்து கொண்ட போலீசார் இந்த மாதம் 13ம் தேதி எல்பிநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கை மாற்றினார்கள்.

இதன்படி எல்பிநகர் போலீசார் முத்தலாக் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அப்துல் சமியை கைது செய்து விசாரிப்பதாக கூறினார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img