29 C
Chennai
20/10/2020 9:00 PM

பஞ்சாங்கம் அக்.20 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்  - அக்.20தினசரி.காம்  ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்*பஞ்சாங்கம்~...
More

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.

  சோழவந்தான் அருகே நெல்கொள்முதல் நிலையம்! விவசாயிகள் மகிழ்ச்சி!

  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள கல் புளிச்சான்பட்டி கிராமத்தில்

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  ‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!

  இருப்பினும் அந்த டிவிட்டர் பதிவுக்கும் விஜய் சேதுபதியை வசைபாடி வருகின்றனர் தமிழகத் தமிழர்கள்.

  கொரோனாவால் இழப்பு? இணையதளத்தை மூடுவதாக தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு!

  தமிழ் ராக்கர்ஸ் முடக்கப்படுவதாக அந்த இணையதளமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு Source: Vellithirai News

  மாஸ்  டர்ர்ர்ர்ர்ர்ர் மாஸ் எதிர்பார்ப்பில்!

  தமிழ்த் திரையுலகில் தற்போது  முன்னணி நடிகராக உள்ள விஜய்.   நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படம் மாஸ்டர்.  இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். 

  Source: Vellithirai News

  நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்: பாரதிராஜா!

  ரூ. 10 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தில் 30% குறைத்துக்கொள்ள இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  Source: Vellithirai News

  வரும்.. ஆனா வராது..: இந்த பிரச்சனை இருக்கா உங்களுக்கு?

  malam

  தினமும் அதிகாலை அலாரத்துக்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாகக் கூறலாம்.

  மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ’மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்துவைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள். கல்போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல்… என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை.

  தினமும் காலையில் வயிற்றைப் பிசைந்தும், வயிற்றுத் தசைகளுடன் குத்துச்சண்டை போட்டுப் பார்த்தும் மலத்தை வெளியேற்ற முயற்சிப்பவர்கள் பலர்!

  ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணி:

  ’மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் என்ன… டீ குடித்தால்தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாக பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

  மேற்சொன்ன எந்த பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் காரணியே மலம்.

  ’சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’ என்று அலட்சியமாகவிடக்கூடிய விஷயம் அல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  காரணிகள்:

  துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. பெருநகரங்களின் துரித வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு, வேறுவழியின்றி தினமும் துரித உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், மலச்சிக்கலைப் பற்றி! துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

  மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள்.

  சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மனஅழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும்.

  இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்கவேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம் வரை கொண்டு செல்லும்.

  மலம் கழிக்கும் முறை முக்கியம்:

  மேலைநாட்டுப் பாணி கழிப்பறையில் (Western toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது, ஒரு சிறுகதையே படித்து முடித்திருந்தாலும், மலம் வெளியேறாமல் தவிப்பவர்கள் உண்டு.

  மூட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும்.

  மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிகளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டு பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாக கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும்.

  அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.

  மலமிளக்கி மருந்துகள் எப்போது தேவை?

  மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.

  malachkkal

  திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.

  ஆனால், பதினைந்து வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவையில்லாமல் வரவழைப்பது தவறு.

  நார்ச்சத்து நலம் தரும்!

  நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள (Insoluble fibre) உணவுகளை கலந்து உட்கொள்ளலாம்.

  பசலை, சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள்… என அனைத்தும் தேவை.

  மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் அறுபத்தைந்து சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

  தண்ணீர்… விளக்கெண்ணெய்:

  குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ’புரோபையாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும்.

  இள வெந்நீர் குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. பன்னாட்டு குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது.

  விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது.

  செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

  குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம்.

  பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். நீண்டகால மலக்கட்டினை சரிசெய்ய, ’பீச்சு’ (Enema) எனப்படும் புற மருத்துவ முறையும் அற்புதமான பலனை அளிக்கக்கூடியது.

  சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

  திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய்… என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன.

  தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

  உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.

  உடல் பேசும் மொழிகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு அடிநாதம்!

  kirai

  தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்…

  மலச்சிக்கலுக்கான அறிகுறிகள்

  மிகவும் இறுக்கமான மலம்
  வயிறு பாரமாக இருப்பது போன்ற உணர்வு
  பசியின்மை
  சில நேரங்களில் வயிற்றுப் பகுதியில் லேசான வலியை அனுபவிக்கக்கூடும்.
  மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்:மூன்று வாரத்துக்குமேல் மலச்சிக்கல் பிரச்சினை தொடரும்போது.

  மலம் போவதில் சிக்கல் உண்டாகி வயிறு வலிக்கும்போது.

  குமட்டல் மற்றும் வாந்தி வரும்போது.

  மலம் கழிக்கும்போது ஆசனவாய் வலித்தால்.

  மலத்துடன் ரத்தம், சீழ், சளி வெளியேறும்போது.

  உடல் எடை குறையும்போது.

  காய்ச்சல், தலைவலி, வாய்க் கசப்பு இருந்தால்.

  மலச்சிக்கலும் வயிற்றுப்போக்கும் மாறிமாறி வந்தால்.

  வயிற்று உப்புசம், பசிக் குறைவு இருந்தால்.

  சுவாசத்தில் கெட்ட வாசனை வந்தால். மருத்துவரை அவசியம் சென்று காணவேண்டும்

  உலர் திராட்சை உலர் திராட்சை மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு சிறிது உலர் திராட்சையை இரவில் தூங்கும் முன் சுடுநீரில் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் உலர் திராட்சை சாப்பிடுங்கள். மறக்காமல் நீரையும் குடியுங்கள். இதனால் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

  பால் மற்றும் எலுமிச்சை சாறு மலச்சிக்கல் தீவிரமான நிலையில் இருப்பவர்கள், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சூடான பாலில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடியுங்கள். முக்கியமாக அதில் சுவைக்காக தேன் கலந்து கொள்ளுங்கள். இப்படி குடிக்கும் போது அது தீவிர மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயில் இருந்தும் விடுவிக்கும்.

  சுடுநீர் மற்றும் உப்பு காலையில் எழுந்ததும் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடியுங்கள். பின் 15 நிமிடம் கழித்து காலை உணவை உட்கொள்ளுங்கள். இப்படி செய்யும் போது குடலியக்கம் சிறப்பாக இருப்பதோடு, செரிமான மண்டலமும் ஆரோக்கியமாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

  பால் மற்றும் பேரிச்சம் பழம் மலச்சிக்கல் தொல்லை தாங்க முடியவில்லையா? அப்படியானால் இரவு உணவு உட்கொண்ட பின் பேரிச்சம் பழத்தை சூடான பாலில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

  பின் தூங்குவதற்கு முன் பேரிச்சம் பழத்துடன் பாலைக் குடியுங்கள். இப்படி செய்யும் போது, பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராகி, மலத்தை எளிதில் வெளியேற்ற உதவும்.

  கற்றாழை சிறிது கற்றாழையை நன்கு காய வைத்து, பொடி செய்து கொள்ளுங்கள். பின் ஒரு டம்ளர் நீரில் 1 சிட்டிகை கற்றாழை பொடி மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து கொள்ளுங்கள். இப்படி ஒரு தொடர்ந்து மூன்று முதல் நான்கு நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

  aloevera herbal 1

  அமரந்தஸ் அமரந்தஸ் கீரையின் இலைகளைக் கொண்டு ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 30-40 மிலி ஜூஸை எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் குடித்துவிட்டு தூங்குங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வர, மலச்சிக்கல் விரைவில் சரியாகும்.

  விளக்கெண்ணெய் 1-2 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் கலந்து, இரவில் படுக்கும் முன் தூங்க வேண்டும். இப்படி தொடர்ந்து 2-3 நாட்கள் இரவில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். இல்லாவிட்டால் விளக்கெண்ணெயை உள்ளங்கையில் சிறிது விட்டு அப்படியே சாப்பிட்டு, பின் ஒரு டம்ளர் சுடுநீர் குடியுங்கள். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

  onion lory

  சின்ன வெங்காயம் சின்ன வெங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இத்தகைய சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு வறுத்து, ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட, மலச்சிக்கல் நீங்கி, வயிறு சுத்தமாகும். இது மிகவும் எளிய முறை, முயற்சித்து தான் பாருங்களேன்.

  நெய் ஒரு டீஸ்பூன் நெய்யை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்து வாருங்கள். இப்படி ஒரு 2 நாட்கள் பின்பற்றினாலே, மலச்சிக்கலில் இருந்து விடுபட்டிருப்பதை நன்கு காணலாம்.

  பப்பாளி பப்பாளி மலச்சிக்கலை சரிசெய்வதில் மிகச்சிறந்தது. அதற்கு மலச்சிக்கல் இருப்பவர்கள், தினமும் பப்பாளியை வெறும் வயிற்றில் அதிகாலையில் சாப்பிட்டு வர, அது குடலியக்கத்தை சீராக்குவதோடு, செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும்.

  தக்காளி, பீட்ரூட் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தக்காளி, பீட்ரூட் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம், அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுவிக்கும். எனவே இந்த காய்கறிகளை மலச்சிக்கலின் போது அதிகம் சாப்பிடுங்கள்.

  சாலட் வெள்ளரிக்காய், கேரட், பூண்டு, சோயா சாஸ், வினிகர் போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் போன்று தயாரித்து, தினமும் ஒருமுறை அல்லது வாரத்திற்கு 2 முறை உட்கொள்வதன் மூலம், குடலியக்கம் ஆரோக்கியமாகி, மலச்சிக்கல் பிரச்சனையில இருந்து விரைவில் விடுவிக்கும்.

  செம்பருத்தி இலைகள் மருத்துவ குணம் நிறைந்த செம்பருத்தியின் இலைகளைக் கொண்டு மலச்சிக்கலுக்கு தீர்வு காணலாம். அதற்கு செம்பருத்தி இவைகளை உலர வைத்து அரைத்து பொடி செய்து நீரில் கலந்து குடித்து வாருங்கள். இதனால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

  fruitstall

  எள்ளு எள்ளு விதைகளும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும். அதற்கு எள்ளு விதைகளை அரைத்து பொடி செய்து, பனைவெல்லத்துடன் சேர்த்து கலந்து, தினமும் 4 டேபிள் ஸ்பூன் அளவில் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சனை காணாமல் போகும்.

  ஆளி விதை ஆளி விதைகள் மலச்சிக்கலில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஆளி விதைகளை வறுத்து பொடியாக்கி, உண்ணும் உணவின் மீது தூவி சாப்பிடுங்கள். இதனால் அவற்றில் உள்ள சத்துக்கள் குடலியக்கத்தை சீராக்குவதோடு, மலச்சிக்கவ்ல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

  தர்பூசணி தர்பூசணியின் விதைகளை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரை தினமு குடித்து வருவதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். வேண்டுமானால் அடுத்த முறை தர்பூசணி வாங்கினால் அதன் விதைளை தனியாக சேகரித்து, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

  ஆலிவ் ஆயில் மற்றும் எலுமிச்சை 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, காலையில் உணவு உண்பதற்கு முன் பருக வேண்டும். ஒருவேளை மலச்சிக்கல் தவிரமாக இருந்தால், காலை மற்றும் இரவு உணவு உண்பதற்கு முன் குடியுங்கள். இதனால் மலச்சிக்கல் நீங்கி, குடலும் சுத்தமாகும்

  நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும் (தவிடு நீக்கப்பட்ட தானியங்களில் நார்ச்சத்து இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்).

  வாழைத்தண்டு, காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள், பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம்.

  இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகப்படுத்தவேண்டும். உதாரணம்: மிளகு ரசம், கொத்துமல்லிச் சட்னி.

  தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, இளநீர், பழச்சாறுகள் குடிப்பதை அதிகப்படுத்த வேண்டும்.

  இனிப்பு வகைகளையும் கொழுப்பு உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். விரைவு உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.

  தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. தேவையில்லாமல் வெயிலில் அலையக் கூடாது. மலம் கழிப்பதற்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம். வேலை அவசரம் காரணமாகக் குறைந்த நேரத்தில் மலம் கழிக்கக் கூடாது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் அதை அடக்காதீர்கள். காலை நேரமானாலும் சரி, மாலை நேரமானாலும் சரி தினமும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குச் செல்லும் வழக்கத்தை உண்டாக்கிக்கொண்டால் அடுத்தடுத்த நாட்களிலும் அதே நேரத்தில் மலம் வந்துவிடும்.

  மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், காலையில் வெறும் வயிற்றில் சிறிது ஆலிவ் ஆயிலை குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையின் ஆரம்ப நிலையில், விளக்கெண்ணெய்யை குடித்து வந்தால், நாளடைவில் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

  veg

  இரவு உறங்கும் முன் திரிபலா சூரணத்தை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் மலச்சிக்கல் குணமாகும்.

  உலர்ந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் அந்த அத்திப்பழத்தையும், தண்ணீரையும் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

  பேரிக்காயை நீர் விட்டு அரைத்து, அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்து வந்தால், மலச்சிகல் குணமாகும்.

  உலர் திராட்சைப் பழங்களை பாலில் காய்ச்சி, திராட்சையை சாப்பிட்டு விட்டு, பின் அந்த பாலை குடிக்க வேண்டும்.

  முள்ளங்கி சாற்றை 50 மி.லி எடுத்து அதை தண்ணீரில் கலந்து 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வர மலச்சிக்கல் குணமாகும்.

  தினசரி உணவில் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, முடக்கத்தான்கீரை மற்றும் பசலைக்கீரை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.

  மலச்சிக்கலை போக்கும் மாம்பழம், கொய்யா, பப்பாளி, திராட்சை, வாழைப்பழம், சப்போட்டா, அன்னாசி போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

  சுக்கு, மிளகு, சீரகம், பெருங்காயம், ஓமம், கறிவேப்பிலை, ஆகியவற்றை நல்லெண்ணெய்யில் வதக்கி பொடி செய்து, காலை உணவுடன் 1 டீஸ்பூன் சாப்பிட்டு வர வேண்டும்.

  செர்ரீஸ், ஆப்ரிகாட்ஸ் மற்றும் ப்ளம்ஸ்
  இந்த பழங்களில் நிறைய நார்ச்சத்துகள் உள்ளன. இதனுடன் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சேர்த்துக் கொண்டு வந்தால் குடலியக்கம் நன்றாக இருக்கும். நார்ச்சத்து குடலில் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்துகிறது.

  ஹெர்பல் சென்னா
  தேநீர் சென்னா மூலிகை மலமிளக்கியாக செயல்படுகிறது. இதிலுள்ள இயற்கை பொருட்கள் குடலியக்க செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.

  இஞ்சி அல்லது புதினா டீ
  புதினா மற்றும் இஞ்சி டீ மலச்சிக்கலை போக்க பெரிதும் உதவுகிறது. இதிலுள்ள மலமிளக்கும் தன்மை குடலியக்கத்தை மேம்படுத்தி மலம் வெளியேற ஈஸியாக்குகிறது. மேலும் பசியை தூண்டுதல், சீரண மண்டலத்தை வலுப்படுத்துதல், சீரண சக்தியை அதிகரித்தல்.

  apple

  டான்டெலியன் டீ
  இது ஒரு சிறந்த மலமிளக்கியாகவும் நச்சுக்களை வெளியேற்றவும் பயன்படுகிறது. எனவே தினமும் ஒரு கப் டான்டெலியன் டீ உங்கள் மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும்.

  கருப்பட்டி
  கருப்பட்டியை நீங்கள் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். நாள்பட்ட அல்லது அவ்வப்போது ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சினையையும் தீர்க்க வல்லது. ஒரு டீ ஸ்பூன் கருப்பட்டியை எடுத்து சூடான நீரில் கலந்து படுக்கைக்கு போவதற்கு முன் குடிக்க வேண்டும். இது காலையில் எழுந்ததும் மலம் எளிதாக வெளியேற உதவும். இது இயற்கையானது மேலும் ரெம்ப சுவையான இனிப்பும் கூட

  பச்சை ஆப்பிள் ஜூஸ்
  தேவையான பொருட்கள்

  2 பச்சை ஆப்பிள்கள்

  3 கிவி பழங்கள்

  கொஞ்சம் லெமன் ஜூஸ்

  பயன்படுத்தும் முறை – மேற்கண்ட பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஜூஸாக்கி பருகுங்கள். மலச்சிக்கலை துரத்தி விடலாம்.

  வீட்டு மருத்துவங்களும் மலச்சிக்கலுக்கு நிவாரணமளிப்பதில் பெரிதும் உதவக் கூடியவை. சில எளிதான வீட்டு மருத்துவங்கள் பின்வருமாறு:

  பெருங்காயம்
  பெருங்காயம் துண்டுகள் இரண்டு சிட்டிகை வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.

  கேரட் விதைகள்
  கேரட் விதைகளை நீர் விடாமல் ஒரு பாத்திரத்தில் வறுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதை வெதுவெதுப்பான நீரில் கலந்து விழுங்க வேண்டும்.

  காஃபி
  காஃபின் ஒரு இயற்கை மலமிளக்கி மற்றும் அது இயல்பில் மிகவும் மிதமானது. ஒரு கோப்பை கருப்பு காஃபியை காய்ச்சி அதைக் காலையில் குடிக்கவும். காஃபின் நீர் வற்றிப்போதலுக்கு வழிவகுக்கும் மற்றும் தூங்கும் நேரத்தில் குடித்தால் தூக்கப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம் என்பதால், இதையே சார்ந்து இருப்பதை வளர்க்காமல் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

  வறட்சியின் அறிகுறிகள்:
  தாகம்
  சிறுநீர் கழித்தல் குறைவது, எரிச்சலுடன் சிறுநீர் கழிவது, சிறுநீர் நிறத்தில் மாற்றம்
  உடல் உஷ்ணம்
  சருமம் உலர்தல்
  அசதி
  தலைச் சுற்றல்

  குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள்:
  உலர்ந்த நாக்கு, உதடு மற்றும் சருமம், குழி விழுந்த கண்கள், கன்னம், காரணமின்றி அழுவது, அதிக ஜுரம், 3 மணி நேரங்களுக்கு மேல் சிறுநீர் கழிக்காதது, அழும்பொழுது கண்ணீர் வராதது.

  வறட்சியை எவ்வாறு தடுப்பது?
  நீர் வறட்சி,

  வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், உடனடியாக இழந்த நீர் மற்றும் தாதுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் மட்டும் போதாது. அதனுடன் தாதுப் பொருட்களும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு எளிய வழி தண்ணீருடன், உப்பு மற்றும் சர்க்கரை கலந்து எடுத்துக் கொள்ளலாம். (ஒரு லிட்டர் சுத்தமான நீர் அல்லது காய்ச்சி ஆறிய நீர் + 1 டீஸ்பூன் உப்பு + 8 டீஸ்பூன் சர்க்கரை)

  குடலில் ஏற்படும் நோய்கள்:

  கீழ்க்கண்டவை அனைத்தும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்படுத்தும்.

  குடல் எரிவு வியாதிகள் (Inflammatory bowel disease)
  இந்த வியாதி குடல் எங்கிலும் எரிச்சலால் புண் ஏற்படுத்தும். பொதுவாக இது 15 – 30 வயதுகளில் ஆரம்பமாகும். வயிற்று வலி மற்றும் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு ஏற்படுத்தும். இது தவிர தோலில் புண், மூட்டுவலி, எடை குறைவு, அசதி, இரத்த சோகை போன்றவை ஏற்படும். பதற்றம், மன அழுத்தம் ஆகியவை இந்த அறிகுறிகளை அதிகப்படுத்தும்.

  குடல் புற்றுநோய்:
  மலம் கழித்தலில் மாற்றம், வயிற்றில் அசௌகரியம், ரத்தம் கலந்த மலம் போன்றவை குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பொதுவாக இந்நோய் ஏற்படும். குடலில் எரிவு நோய்கள், அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல், ஏற்கனவே குடும்பத்தாருக்கு குடல் புற்றுநோய் இருப்பது போன்றவை இந்நோய் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

  இரிடபிள் பௌவல் சின்றோம் (Irritable bowel syndrome)
  குடலின் செயல்பாடுகளை தானியங்கி நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. சிலவகையான உணவு மற்றும் மனஅழுத்தத்திற்கு சிலரின் குடல் வெகுவாக எதிர்விளைவு உண்டாக்கும். அதன் காரணமாக, வயிற்றில் வலி, மலம் கழித்த பிறகு வயிற்றுவலி குறைதல், உப்புசம், மலத்தில் சளி ஆகியவை ஏற்படும். நோய்க்கான காரணிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அதிக உணவு, சாக்லேட், பால், காபி, டீ போன்ற உணவு வகைகள், சிலவகை மருந்துகள், உணர்ச்சிவசப்படுதல், மனச் சோர்வுடன் இருத்தல், பதற்றமடைதல் இவை அனைத்தும் இந்நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும்.

  YOGA 4

  யோகா

  உடலை எப்போதும் தளர்வான நிலையில் இருக்கச் செய்வதால் மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் உடலின் பல்வேறு செயல்கள் திறம்பட நடக்கிறது.
  யோகா, குறிப்பாக, தானியங்கி மண்டலத்தை சமன் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடலின் செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அது சமனாக இருந்தாலே, குடலில் ஏற்படும் கோளாறுகள் குறைகின்றன

  மலச்சிக்கல் ஒர் உயிர்க்கொல்லி நோயல்ல. அதனால் எப்போதாகிலும் மலம் கழியாது போகுமானாலும், அளவில் குறைந்து கழியுமானாலும் அதற்காகத் பயப்பட வேண்டிய தேவையில்லை.

  மேலும் ஒன்றிரண்டு நாட்களுக்கு மலம் கழியாது இருந்த பின்னர் கழிக்கின்ற போது மலம் அளவில் மிகுந்து இருக்குமெனவும் எதிர்பார்க்கக் கூடாது. ஏனெனில் உணவின் சக்கை, மலக் குடலிலே ஒரிரு நாட்கள் இருக்க நேரிடும் போது, அதிலுள்ள நீர்ச் சத்து முற்றிலுமாக உறிஞ்சப்பட்டு விடுவதால், மலம் கெட்டிப்பட்டுப் போவதுடன் அளவிலும் குறைந்து விடுகிறது.

  எனவே இந்த விஷயம் உங்கள் மன அமைதியைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை. கழிவு எதுவும் வெளியே வராமல் உள்ளேயே தங்கி இருக்கப் போவதுமில்லை. சேர்ந்தாற் போல் சில நாட்கள் கழிவறைக்குச் செல்லாமல் இருந்தால் கூடக் கவலையுறத் தேவையில்லை. ஆனால் எப்போதும் மலம் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்குத்தான் இது பொருந்தும்.

  நாள்தோறும் நேரந்தவறாமல் கழிவறைக்குச் சென்று வருகின்ற ஒருவருக்கு இது போல் நேருமானால் அவர் தனது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதை உணர்ந்து மருத்துவரை நாடுதலே சரியாகும்.

  காரணங்கள்

  1. உணவில், உணவின் கொள்ளளவை அதிகரிக்கும் நார்ச்சத்து இல்லாமை
  2. இயற்கையாக மலம் கழிக்கும் உணர்வு வந்தும், அதை அடக்கிக் கொள்ளுதல். கழிவுப் பொருட்கள் கோலோனிலிருந்து மலக்குடலுக்கு வந்து அதன் சீத சவ்வுடன் (Membrane) உராயும் போதே, கழிவறைக்கு செல்ல வேண்டுமென்ற உணர்வை மூளை தெரிவிக்கிறது. இந்த உணர்வை பொருட்படுத்தாமல் அடக்கிக் கொண்டே வந்தால், நாளடைவில் இவ்வுணர்வு தோன்றாமலே போய் விடும். பெருங்குடலின் தசை அசைவுகள் பெருமளவில் குறைந்தால் அது Colon Inertia (பெருங்குடல் மந்தம்) எனப்படும். இது தீராத மலச்சிக்கலை உருவாக்கும்.
  3. உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாமை, குறிப்பாக வயதானவர்களுக்கு இது பொருந்தும்.
  4. அமில எதிர்ப்பு (Antacid) மற்றும் மலமிளக்கி மருந்துகளும் காரணமாகலாம். அலுமினியம் ஹைட்ராக்ஸைட், மனதை சமனப்படுத்தும் மருந்துகள், அயச்சத்து மருந்துகள் இவை அடிக்கடி மலச்சிக்கலை உண்டாக்கும்.
  5. பெருங்குடலுக்கு குறைந்த அளவு ரத்தம் பாய்ந்தால், கழிவை வெளியேற்றும் தசை அசைவுகள் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் ஏற்படும்.
  6. நீர்மச்சத்து குறைந்து போதல். போதுமான அளவு தண்ணீர் குடிக்காமலிருப்பதும் ஒரு காரணம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், உடல் கழிவுப்பொருட்களிலிருந்து எல்லா நீரையும் உறிஞ்சிக் கொண்டு விடும்.
  7. மலக்குடல் பாதிப்புகள்
  8. பால் ஒவ்வாமை
  9. அடிவயிறு மற்றும் குதத் தசைகளை ‘கன்ட்ரோல்’ செய்ய முடியாமல் போதல். இதை Dyschezia என்பார்கள்.
  10. மன இறுக்கம் (Stress), மனச்சோர்வு (Depression) போன்றவை தீவிர மலச்சிக்கலை உண்டாக்கும். மனநிலை கோளாறுகளால் வயிறு பாதிக்கப்படும். மூளையில் உள்ள செரோடினின் ‘லெவல்’ பாதிக்கப்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும்.
  11. கீழ்க்கண்ட வியாதிகள் மலச்சிக்கலை உண்டாக்கும். இந்த வியாதிகளால் கழிவுப் பொருட்களின் கோலோன், மலக்குடல், குதம் இவற்றின் வழியே நடக்கும் பயணத்தை தாமதப்படுத்தும். பார்க்கின்சன்ஸ் நோய், குறைந்த தைராயிட் சுரப்பு, ரத்தத்தில் அதிக அளவு கால்சியம், நீரிழிவு, நரம்பு மற்றும் முதுகெலும்பு பாதிப்புகள்.
  12. தவறான உணவு, வாழ்க்கை முறை.

  அறிகுறிகள்

  amaranthas

  வயிற்று வலி ஏற்படும். பிரட்டல் ஏற்படலாம். பசி எடுக்காது. சிரமப்பட்டு மலம் கழிப்பதால் குதத்தின் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு மூலநோய் உண்டாகும். மலச்சிக்கலின் தீவிர பாதிப்பு மூலநோய்.

  டைவர் டிகுலர் (Diverticular) வியாதி ஏற்படும். இறுகி, கல் போலான மலத்தால் பெருங்குடலின் சுவர்கள் பாதிக்கப்படும். இதனால் பெருங்குடலில் ‘பலூன்’ போன்ற ‘பைகள்’ உருவாகி வீக்கமும், அடைப்பும் ஏற்படும். இது தான் டைவர் டிகுலர் வியாதி.

  ஆயுர்வேத சிகிச்சை அணுகுமுறை

  ஆயுர்வேதத்தின் படி, ஒரு நாளில், அதாவது 24 மணி நேரத்தில் ஒரு தடவையாவது மலம் கழிக்காவிட்டால், அந்த கோளாறு மலச்சிக்கல்.

  இயற்கையின் உந்துதல்களை ஆயுர்வேதம் ‘வேகம்’ என்கிறது. மலவேகம் தடைப்பட்டால் ஏற்படும் உபாதைகளை ஆயுர்வேதம் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது.

  கீழ்க்காலின் கெண்டச் சதையில் வலி ஏற்படும்.
  நீர்க்கோர்வை, ஜலதோஷம், தலைவலி அடிக்கடி ஏற்படும்.

  மலபந்தம், பார்வை மந்தம், பசியின்மை, வயிற்று வலி உண்டாகும்.

  சிகிச்சை முறை

  1. அத்திப்பழத்தை (உலர்ந்தவை) தண்ணீரில், இரவில் ஊறவைத்து, காலையில் உட்கொள்ளலாம்.
  2. சாப்பிடும் முன்னும் அல்லது பின்னும் பப்பாளி பழத்தை உண்பது மலச்சிக்கலை கண்டிக்கும்.
  3. காலையில் உப்பு சேர்த்த வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம்.
  4. காலையில் எழுந்திருப்பதற்கு ஒரு மணி முன்பாக விழித்து, 1 – 2 கப் உப்பு கலந்த வெந்நீரை குடித்து மீண்டும் படுக்கச் செல்லவும். இது சுலபமாக மலம் கழிக்க உதவும்.
  5. காரட் ஜுஸ்ஸடன் பசலைக் கீரை ஜுஸ், மற்றும் சிறிதளவு எலுமிச்சம் பழ சாறும் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.

  உணவின் மூலம்

  1. கோதுமை ரொட்டிகளை உண்ணவும். அரிசி உணவை குறைக்க வேண்டும்.
  2. நிறைய பச்சை காய்கறிகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு இயற்கையான நல்ல உணவு மருந்து.
  3. நிறைய தண்ணீர் குடிக்கவும்.
  4. பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
  5. வாத பிரகிருதிகளுக்கு நெய்யும், எண்ணையும் நன்மை செய்யும். பெருங்குடலுக்கு எண்ணை பசையை அளித்து, மலம் நகர உதவும்.
  6. ஒதுக்க வேண்டிய உணவுகள் / – ‘பாட்டில்’ பானங்கள், ஜாம், பிரெட், ஐஸ்கிரீம், ஊறுகாய், அப்பளம், சீஸ், ‘சமோசா’ இவைகளை குறைக்கவும்.
  7. சேர்க்க வேண்டியவை:- முழுகோதுமை, பாலிஷ் செய்யப்படாத அரிசி உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, ஆப்பிள், வாழைப்பழம் போன்றவை. பீன்ஸ், முள்ளங்கி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ், வெங்காயம், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள்.
  8. ஜீரகம், மிளகு, மஞ்சள், தனியா, பெருங்காயம் – இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
  9. உணவை வாயில் அதிகமாக மென்று அரைத்தால் ஜீரணமாவது சுலபம்
  10. காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

  இதோ சில மூலிகைகள்.

  1. வில்வம் (Aegle marmelos) பொதுவாக பழங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும். அவற்றில் சிறந்தது வில்வ பழம். நல்ல மலமிளக்கி. காயை விட பழுத்த பழம் ஏற்றது. குடல்களை கழுவும். 2-3 மாதங்கள் உபயோகிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 60 கிராம் பழம் போதுமானது. சாப்பிடும் முன் எடுத்துக் கொள்ளலாம்.
  2. சரக்கொன்றை, கொன்னை (Cassia Fistula) கொன்னை மரத்தின் பழக்கதுப்பு மலச்சிக்கலை குறைக்கும் மலமிளக்கி. பக்க விளைவுகள் இல்லாதது.
  3. ஆமணக்கு (Ricinus Communis) பழங்காலத்தில் நம் வீடுகளில் கடைப்பிடித்த விளக்கெண்ணை மருத்துவம். பாதுகாப்பானது.
  4. கடுக்காய் (Terminala Chebula) இது ஒரு குறைந்த வீர்யம் கொண்ட மிருதுவான மலமிளக்கி. இதன் கதுப்பை கல் உப்பு, அல்லது இலவங்கம், கிராம்பு (சிறிய அளவில்) இவற்றுடன் உண்ண வேண்டும்.

  அத்திப்பழங்கள்

  அத்திப்பழங்கள் உலர்ந்த மற்றும் பழுத்த நிலைகளில் கிடைக்கிறது. அத்திப்பழங்களில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகின்றன. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற ஒரு கிளாஸ் பாலில் ஒரு சில அத்திப்பழங்களை வேக வைத்து படுக்கைக்கு முன் குடித்து வாருங்கள். குடிக்கும் போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்க வேண்டும். இந்த பால் உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

  ​கொய்யாப்பழம்

  கொய்யாப்பழத்தில் நீரில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. அவை ஆசனவாயில் சளி உற்பத்திக்கும் பெரிஸ்டால்சிஸுக்கும் உதவுகின்றன (குடல் புறணிக்குள் தொடர் சுருக்கங்கள் வயிற்றில் உணவை கடக்க உதவுகின்றன). இதனால் மலம் எளிதாக வெளியே வரும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருக்காது..

  orange

  ஆரஞ்சு

  ஆரஞ்சு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கிய சிறந்த பழமாகும். தினமும் இரண்டு ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது, காலையில் ஒரு முறை மற்றும் மாலை ஒரு முறை என மலச்சிக்கலில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்க உதவுகிறது.

  ​உலர் திராட்சை

  திராட்சையும் (கிஷ்மிஷ் பழம் ) நார்ச்சத்து நிரம்பியுள்ளன மற்றும் சிறந்த இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன. ஒரு சில உலர்ந்த திராட்சை பழங்களை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடியுங்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்கவும் இது உதவுகிறது.

  குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால், ஆளி விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி கொடுக்க வேண்டும்.
  பெருஞ்சீரகத்தை கருக்காமல் வறுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் 1 ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்தால், உடனே குணமாகும்.
  குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலை போக்க, உலர் திராட்சை பழத்தை பால் அல்லது நீரில் ஊறவைத்து, பின் அந்த பழத்தின் சாறு எடுத்து கொடுக்க வேண்டும்.

  ,மாதவிடாய் காலங்களில் மலச்சிக்கல்

  இதற்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர்.

  மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம்
  மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் வயிற்று வலியை போல் அதுவும் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு என்ன காரணம்உடல் நலம் பாதிப்பு : இவை எதுவும் இல்லை எனில் புதிதாக உங்களுக்கு பிசிஓஎஸ் , பிசிஓடி பிரச்னை உருவாகியிருக்கலாம். எனவே எதுவாக இருந்தாலும் காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது நல்லது.

  மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வருவது வயிற்றுவலியை போல் சாதாரண நிகழ்வுதான் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் என்பது சற்று அசௌகரியமான விஷயம்தான் என்றாலும் இந்த பிரச்னையை தவிர்க்க இயலாது என்கின்றனர்.

  இதற்கு என்ன காரணம்?

  இதற்கு ஹார்மோன் பிரச்சனையே காரணம். மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும். அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும். இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம் என்கிறனர்.

  menopause-1

  இதை எப்படி சரி செய்வது ?

  இதற்கு ஒரே வழி மாதவிடாய் தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பும், மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் நார்ச்சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிட வேண்டும்.அதாவது நார்ச்சத்து கொண்ட ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.

  ஸ்ட்ராபெர்ரிகளை விட இருமடங்கு நார்ச்சத்து கொண்டிருப்பதால், ராஸ்பெர்ரி உங்கள் மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது செரிமான அமைப்பு மூலம் உணவு சீராக செல்ல உதவுகிறது. மேம்பட்ட செரிமானத்தை எளிதாக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் பெர்ரி உதவுகிறது.

  கிவி சிறந்த மலமிளக்கியாகும். உங்கள் மலச்சிக்கலை போக்க கிவி பழம் உதவும்.
  பெக்டின் நார்ச்சத்து நிரம்பிய, ஆப்பிள்களை உட்கொள்வது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
  அத்திப்பழம் குடல்களை வளர்க்கிறது மற்றும் தொனிக்கிறது மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே உலர்ந்த அத்திப்பழங்களை உங்கள் காலை உணவில் சேர்க்கலாம்.

  மலச்சிக்கல் நிவாரணத்திற்கு கொடிமுந்திரி சாறையும் பருகலாம். ஏனெனில் இதில் செல்லுலோஸ் போன்ற கரையாத நார்ச்சத்து உள்ளது. இது மலத்தில் உள்ள நீரின் அளவை அதிகரிக்கிறது. மேலும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

  நார்ச்சத்து நிறைந்த, பேரிக்காய் பழம் மலச்சிக்கலை எளிதாக்க உதவும். மலச்சிக்கலை வேகமாக போக்க பேரிக்காய் சாறு அருந்தலாம்.
  இரவு உணவிற்கு முன் ஒவ்வொரு நாளும் மாலையில் அரை கப் விளாம் பழ கூழ் மற்றும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

  ஆலிவ் ஆயிலை எப்படி பயன்படுத்த வேண்டும்?1 கப் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நமது குடலில் இருக்கும் பாக்டீரியாக்களை திகரித்து, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தடுக்கப்படுகிறது.1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் ஆவில் ஆயில் சேர்த்து கலந்து, இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் குடல் வறட்சியடைவது தடுக்கப்பட்டு, குடலியக்கம் சீராக நடைபெறுவதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.

  சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்பட்டால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலும், இரவில் தூங்குவதற்கு முன்பும் 1 டீஸ்பூன் அளவு ஆலிவ் ஆயிலைக் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்

  peenet

  வேர்க்கடலை கஞ்சி

  வேர்க்கடலைக் கஞ்சி செய்ய ஐந்து பொருட்கள் மட்டும் இருந்தாலே போதும்.

  வேர்க் கடலை ( பொடி செய்தது ) ¼ கிலோ
  முருங்கை இலை ( பொடி செய்தது) 20 கிராம்
  பால் ¼ லிட்டர்
  தண்ணீர் ½ லிட்டர்
  நாட்டுச் சர்க்கரை தேவையான அளவிற்கு
  செய்யும் முறை :

  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதனுடன் வேர்க் கடலை பொடி சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும்.
  பிறகு அடுப்பில் வைத்து நன்கு காய்க்க வேண்டும். பழுப்பு நிறமாக மாறிய உடன் ( வெந்த பதம் தெரியும் ) முருங்கை பொடியைச் சேர்க்க வேண்டும். நன்கு கரைந்த உடன், பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை தேவையான அளவிற்குச் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு காய்த்து இறக்கவும். ஆற வைத்து பிறகு அருந்தலாம்.
  வேர்க்கடலைக் கஞ்சியின் நன்மைகள் :

  மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  வாயுத் தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் உடலில் வாயுத் தொல்லை நீங்கும்.
  இந்த வேர்கடலைக் கஞ்சியை அதிகப்படியான பசியுணர்வு உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பசியுணர்வை சீராக்க உதவும்.

  தொந்தரவின்றி தேவையான போது கழிப்பறைக்குச் சென்று வருவதற்கென்று போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வரும்போது ஒருபோதும் அதை உதாசீனப்படுத்தக்கூடாது.
  உணவு வகைகளில், காரம், மிகுந்த புளிப்பு முதலியவை கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்கு வகைகள் எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவு வகைகள்.

  செயல்கள் :
  உடல் வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய செயல்கள், மலவாயை உறுத்தும்படியான செயல்கள் (எப்போதும் உட்கார்ந்திருத்தல், அதிகமாக வாகனங்களில் பயணித்தல்) தகுந்த ஆசிரியரின் உதவியின்றி யோகா பயிற்சி செய்தல், அடிக்கடி பட்டினி கிடத்தல்

  மருந்தாகும் உணவு வகைகள்:
  கருணைக்கிழங்கு மூல நோயைச் சரி செய்யும், மலத்தை இளக்கும்படியான பழங்கள், கீரை வகைகள் அதிகம் உண்ண வேண்டும். குளிர்ச்சி தரும் பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும்.

  கீரைகளில் துத்திக்கீரை, வெந்தயக் கீரை, முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்காண்ணி, பசலைக்கீரை, முளைக்கீரை, அறுகீரை, தாளிக்கீரை முதலியன எருவை இளக்குவதோடு எரிச்சலின்றி எரு வெளியாக உதவுவதால் இவற்றில் ஒன்றை அடிக்கடி உண்ணலாம்.

  காய்கறிகளில் வெண்டைக்காய், கோவைக்காய், அத்திக்காய் முதலியன மூல நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.பன்றிக்கறிதான் அது.

  சிகிச்சை முறை:

  மிகுதியடைந்த வாதத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர முதலில் கழிச்சலுக்கான மருந்து கொடுத்து பின்னர் நோய்க்கான மருத்துவம் செய்யப்படுகிறது. மேலும் இந்நோயில் ஏற்படும் வலி, எரிச்சல் முதலியவற்றைப் போக்க சித்த மருத்துவத்தில் ஒற்றடம், ஆவி பிடித்தல்,
  புகை, பற்று, பூச்சு, கார சிகிச்சை போன்ற புற மருத்துவமுறைகளும் செய்யப்படுகிறது

  மேலும் இந்நோயில் இரசம், இரத்தம் முதலான தாதுக்கள் வன்மை இழப்பதால் இரத்த விருத்தி அடைவதற்கான உணவு, மருந்துகள் உட்கொள்ள வேண்டும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய்க்குளியல் அவசியம். இதனால் உடல் சூடு குறைந்து அதனால் ஏற்படும் நோய் தீரும்.
  மலச்சிக்கல், எருவாயில் வலி, எரிச்சல், அரிப்பு போன்ற மூலநோயின் அறிகுறிகள்

  ​விதை கலவைகள்

  3 சூரியகாந்தி விதைகள், ஒரு சில ஆளி விதைகள், தில் அல்லது எள் விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பயன்படுத்துங்கள். இந்த விதை கலவைகள் உங்க மலச்சிக்கலை போக்க கை கொடுக்கும். காலையில் இந்த விதைகளை சாலட்டில் சேர்க்கலாம். அல்லது தினமும் 1 தேக்கரண்டி என விதைப்பவுடரை சாப்பிட்டு வரலாம். இதில் நார்ச்சத்துகள் இருப்பதோடு குடல் சுவர்களை புத்துயிர் பெற உதவுகிறது.

  மலச்சிக்கலால் பாதிக்கப்படும்போது இந்த பச்சை நிற ப்ரோக்கோலி காய்கறியை சாப்பிடுவது உதவியாக இருக்கும்.
  நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகையில் உங்கள் உணவில் இனிப்பு உருளைக்கிழங்கை சேர்த்துக்கொள்ளுங்கள்.

  இனிப்பு உருளைக்கிழங்கு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகின்றன. உங்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் மூலம் இவை உங்கள் குடல் இயக்கத்தையும் மேம்படுத்துகின்றன.

  ஃபைபர் மற்றும் மெக்னீசியம் இரண்டிலும் அதிகமாக இருக்கும் உணவு பசலைக்கீரை. இது உங்கள் உடலில் இருந்து பெருங்குடல் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் இது மலச்சிக்கல் நிவாரணத்தை வழங்குவதுடன் இணைக்கப்பட்டுள்ளது.

  பிரஸ்ஸல்ஸ் முளைகளும் ஃபைபர் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இவை மலமிளக்கியாக பயன்படுகின்றன. இது குடல் வழியாக உணவு செல்ல எளிதாக்குகிறது.மேலும் இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் வழங்க உதவுகிறது.

  கூனைப்பூ உட்கொள்ளும்போது, குடல் இயக்கம் நன்றாக செயல்படுகிறது. செரிமான உணவை அதனுடன் எடுத்துச் சென்று தேவையற்ற விஷயங்களை மலமாக வெளியேற்ற உதவுகிறது.

  ருபார்ப் மலமிளக்கிய விளைவைக் கொண்டுள்ளது. பிரபலமான மூலிகை மலமிளக்கியான சென்னோசைடு என்ற கலவை இருப்பதால், இந்த ருபார்ப் இலைகள் குடல் தூண்டுதல் பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

  பீன்ஸ் உட்கொள்வது சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கவும், உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவும். பீனில் உள்ள நார்ச்சத்து உங்களின் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது.

  உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், நீங்கள் கண்டிப்பாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம். குடலை ஆற்றவும், குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும் வெள்ளரி சாலட் தினமும் சாப்பிடுங்கள்.

  உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் நீங்கள் முட்டைக்கோஸை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடலாம்.

  வெண்டைக்காயை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும். இதில், மியூசிலாஜினஸ் ஃபைபர் உள்ளது. இது மலச்சிக்கலை போக்க உதவும்.

  பாப்கார்ன், காபி, ஓட்மீல், பருப்பு வகைகள், அரிசி தவிடு, சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் ஆகும். மலச்சிக்கலை போக்க பல உணவுகள் உதவும். இதில், ஃபைபர் நிறைந்த உணவுகள் குடல் இயக்கங்களைத் தூண்டுகிறது. இதனால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நீங்கள் வெளியேறலாம்.

  தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் பாலில் இந்தப் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச்சிக்கல் தீரும். மேலும் கறிவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.

  பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டுக் காய்ச்சவும். இரவு படுக்கப் போகும் போது இதைக் குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

  papaya

  பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்..
  அகத்திக் கீரையை வாரம் 1 நாள் சமைத்து உண்ண மலச்சிக்கல் தீரும்…
  காலை எழுந்தவுடன் 1.260 மி சுத்தமான குடிநீர் அருந்தி வர மலச்சிக்கல், வயிற்று உபாதைகள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்…
  எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பிழிந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.
  வல்லாரையை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
  இளநீரில் சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.
  துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி, அகத்திக் கீரை ஆகியவைகளின் இலைகளை பறித்து நிழலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரு வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

  தேவையான பொருட்கள் :

  1 டேபிள் ஸ்பூன் சூடான நெய் :
  1 டம்ளர் சுடு தண்ணீர்

  செய்முறை :

  1 டேபிள் ஸ்பூன் சூடான நெய்யை சாப்பிட்டு உடனே 1 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  இதை தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன் சாப்பிட்டால் மலச்சிக்கல் காணாமல் போகும்.
  இதே முறையை இரவில் படுப்பதற்கு முன் செய்தால் வறட்டு இருமல் குணமாகும். உங்கள் மலச்சிக்கல் மற்றும் வறட்டு இருமல் மாயமாய் போக இந்த எளிய முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

  நெய் ஒரு இயற்கையான மலமிளக்கி ஆகும். இந்த நெய் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாகும். இது குடலின் சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை வெளியேற்றி விடும். மேலும் மலத்தை நெகிழ்வாக்கி இலகுவாக வெளியேற உதவுகிறது.

  baby 2 1

  குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலுக்கு ஓமம் ஓர் மருந்து
  ஒரு டம்ளர் குடிக்கும் அளவுக்கு மிதமான சூடான நீரில் ஒரு ஸ்பூன் ஓமம் மற்றும் சர்க்கரை கலந்து மலச்சிக்கல் உள்ள குழந்தைக்கு கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகி விடும்.

  குழந்தைகளின் மலச்சிக்கலுக்கு தேன் ஒரு மருந்து
  ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் பாலில் சிறிது தேன் கலந்து கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகும்.

  நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்கள் சீரகத்தை வாயில் வைத்து மென்று சிறிது சிறிதாக சாறு இறக்கினால் அஜீரணக் கோளாறு நீங்கி மலச்சிக்கல் தீரும்.

  சீரகத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
  சீரகம், ஏலம், பச்சைக் கற்பூரம் இவைகளைப் பொடித்து ஓரளவில் எடுத்து அதே அளவு சர்க்கரை சேர்த்து காலை, மதியம் இரவு என்று மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் வாயுவினால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
  வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
  ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
  வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்

  பாலக்கீரை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கீரை மிகவும் சிறந்தது. ஏனெனில் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்தக் கீரை உதவுகிறது. இந்த கீரையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, இரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். குடல் நோய்களுக்கு இந்த கீரை நல்லது.

  palak

  மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் பாலக்கீரை சாதம்

  பாலக்கீரை சாதம் –
  பாலக் கீரை – 2 கட்டு
  பாசுமதி அரிசி – 1 கப்
  மிளகாய் தூள் – ½ ஸ்பூன்
  மஞ்சள் தூள் – சிறிதளவு
  தனியா தூள் – சிறிதளவு
  கிராம்பு, ஏலக்காய், பட்டை – சிறிதளவு
  சின்ன வெங்காயம் – தேவையான அளவு
  தக்காளி – 1
  இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
  பச்சை மிளகாய் – 4
  எண்ணெய் – தேவையான அளவு
  உப்பு – தேவையான அளவு
  வெந்தயம் – 1 ஸ்பூன்

  பாலக்கீரையை நன்றாக சுத்தம் நறுக்கி கொள்ளவும். வெந்தயத்தை வறுத்து பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் குக்கரில் அரிசியை போட்டு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு மற்றூம் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் பாலக்கீரை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். சாதத்தை அதில் சேர்த்து கிளறி வெந்தய பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பாலக் கீரை சாதம் தயார்.

  Latest Posts

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  தேவதானம் பகுதியில்… உயர்மின் அழுத்த கம்பியில் கொக்கி போட்டு மர்ம நபர்கள் அட்டூழியம்!

  கால்நடைத் தீவனத்திற்கு தீவைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகினனர்.
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  சமூகத் தளங்களில் தொடர்க:

  18,009FansLike
  257FollowersFollow
  15FollowersFollow
  71FollowersFollow
  951FollowersFollow
  17,300SubscribersSubscribe

  அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!

  இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது

  தடுப்பூசி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் வரை கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும்!

  நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஏழாவது முறையாக உரை நிகழ்த்தினார் முன்னதாக இன்று மாலை ஆறு

  கோயில் கல்வெட்டில் கிறிஸ்துவ மதமாற்ற போஸ்டர்கள் ஒட்டப் பட்டதால் பரபரப்பு!

  மக்கள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இது போன்ற நபர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை

  நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே! அது என்ன?

  லலிதாதேவி வசிக்கும் லோகம் மணித்வீபம் என்று கூறுகிறார்களே... மணித்வீபம் என்பது அம்பாளின் நிவாசமா?

  நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்ரீசக்ரத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?!

  லலிதா தேவியின் மறுவடிவமான ஸ்ரீசக்ரத்தை எவ்விதம் வழிபடவேண்டும்? ஸ்ரீசக்கரம் வீட்டில் வைத்து பூஜிக்கலாமா?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்?

  இறைவனை எந்த உருவத்தில் வழிபட வேண்டும்? என்ன பெயர் கொடுத்து அழைக்க வேண்டும்?வைணவ குருபரம்பரையில் நஞ்ஜீயர் என்பார் வெண்ணைக்காடும் கண்ணன் விக்ரஹம் ஒன்று கிடைக்கப் பெற்றார். ஒரு பாதம்...

  பாஜக.,வினர் உட்பட கட்சியினர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை!

  பாதிக்கப்படப்போவது நம் குடும்பத்தினர் தான் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது.

  அரசு பணத்தில் ‘இஸ்லாமிய தலைநகர்’ கல்வெட்டா?

  தமிழக அரசு கல்வெட்டு வைக்க அனுமதிக்குமா? மதசார்பற்ற அரசு என்பது உதட்டளவிலா? உண்மையிலா?

  பொதுச் சொத்தை கொள்ளை அடிப்பவர்களின் கனவைக் கலைப்பவராக இருப்பதால்…

  இழிந்த அரசியல்வாதிகளைப் போல் அவர் பொதுச் சொத்தைக் கொள்ளையடித்தவரில்லை