அமெரிக்க அதிபருக்கு அடுத்து இவரே!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
modiji
modiji
  • பிரதமர் மோடி ஒரே இந்தியர்.
  • அமெரிக்கா ஜனாதிபதிக்கு அடுத்தது இவரே.

பாரத பிரதமர் நரேந்திர மோடி சோஷியல் மீடியாவில் மற்றுமொரு அற்புதமான பெருமையை சாதித்துள்ளார். பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி இன்று உலக அளவில் கூட லட்சக்கணக்கான அபிமானிகள் உள்ள விஷயம் தெரிந்ததே.

சோஷல் மீடியாவில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கியபடியே அரசியல், ஆட்சி அமைப்பு, சமுதாய அம்சங்களை அப்போதைக்கப்போது மக்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருப்பார்.

பிரபல சோசியல் மீடியா மேடையாக டிவிட்டரில் பிரதமர் மோடி மற்றுமொரு மைல் கல்லைத் தாண்டி உள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டர் அக்கவுன்ட்டை தற்போது 60 மில்லியன் (6 கோடி) பேருக்கு அதிகமாக ஃபாலோ ஆகி வருகிறார்கள். இதனால் மிக அதிக அளவில் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள உலக அரசியல் தலைவர்களில் நரேந்திர மோடி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

120 மில்லியன் ஃபாலோயர்ஸோடு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார். 83 மில்லியன் ஃபாலோயர்சோடு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளார்.

இந்தியாவில் பார்த்தால் மோடியே மிக அதிக அளவில் ஃபாலோயர்ஸ் கொண்டுள்ள ஒரே தலைவர் என்பது சிறப்பு.

குஜராத் முதல்வராக இருந்த சமயத்திலேயே 2009ல் நரேந்திர மோடி தனது டிவிட்டர் அக்கவுண்ட்டை தொடங்கினார். 2014 ல் மோடி பிரதமர் பதவியை ஏற்றபோது டுவிட்டரில் அவருடைய பாப்புலாரிட்டி இன்னும் அதிகமாகியது.

அதோடு அவருடைய ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரதமர் அலுவலகத்தின் அதிகார டிவிட்டர் அகௌண்ட்டைக்கூட 37 மில்லியன் பேர் ஃபாலோ ஆகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.