கேசிஆரின் மாஸ்டர் பிளான்; பிவி நரசிம்மராவின் மகளுக்கு எம்எல்சி பதவி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kcr

அரசியல் வியூகம் அமைப்பது, அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்துவது போன்றவற்றில் தெலங்காணா மாநில முதலமைச்சர் எத்தகைய நிபுணரோ அனைவருக்கும் தெரிந்ததே.

எதிர்க்கட்சிகளிடம் நடுக்கத்தை ஏற்படுத்துவதில் கேசிஆரை மிஞ்சிய தலைவர்கள் தெலுங்கு மாநிலங்களில் யாருமில்லை என்றே கூற வேண்டும். ஏதாவது ஒரு அம்சத்தில் ஃபோகஸ் செய்தார் என்றால் அதனை முழுமையாக முடிக்கும்வரை தூங்க மாட்டார் என்று அவரைப் பற்றி கூறப்படுகிறது.

அண்மையில் அதுபோன்று மாஸ்டர் பிளான் ஒன்று போட்டதாக தெலங்காணா அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தனக்கு பிடித்தால் ஆகாயத்தில் தூக்கி உயர்த்துவது. இல்லை என்றால் பாதாளத்தில் போட்டு மிதிப்பது போன்ற விஷயத்தில் எப்படிப்பட்ட இரக்கமும் காட்ட மாட்டார் கேசிஆர்.

pv-narasimmarao-daughter

அதே சமயத்தில் நேரத்திற்குத் தகுந்தாற்போல் பேசுவதும் தன் வாதத்தால் அனைவரையும் கன்வின்ஸ் செய்வதும் அவருக்கு உரிய குணம். பிவி நரசிம்மராவு நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் இவருடைய இந்த குணத்திற்கு மற்றுமொரு நிரூபணம். இதனை பிவி நரசிம்மராவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் மற்றொரு முறை பதிவு செய்தார் என்றே கூறவேண்டும்.

கேசிஆர் தெலங்காணா போராட்டக்காரராக இருந்தபோது பிவி நரசிம்மராவை அதே வேலையாக விமர்சித்தார். அதோடுகூட கடினமான விமர்சனங்களை எல்லாம் அவர்மீது தெளித்தார். ஆனால் அண்மையில் தெலங்காணா மாநிலத்தை சேர்ந்த பிவியை தம் கட்சியின் தலைவராக மாற்றிக் கொள்வதன் மூலம் காங்கிரசுக்கு அடி விழ வைக்க வேண்டும் என்ற வியூகத்தை தயார் செய்துள்ள கே சி ஆர், பிவி நரசிம்மராவு நூற்றாண்டு விழா உற்சவத்தை தனக்கு அனுகூலமாக மாற்றிக் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

யாரும் ஊகிக்க முடியாத அளவில் பிவி நரசிம்மராவு நூற்றாண்டு விழா உற்சவங்களை நிர்வாகிக்க போகிறோம் என்று கூறியதோடு கோடிக்கணக்கான ரூபாய்களை அப்போதைக்கு அப்போதே அதற்காக ஒதுக்கினார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

pvr-kcr

ஓராண்டு காலம் பிவி நரசிம்மராவின் நூற்றாண்டு விழா தொடர்பாக அரசாங்கம் என்ன என்ன செய்யப்போகிறது என்ற விஷயத்தை வெளிப்படுத்திய கேசிஆர்., பிவி நரசிம்மராவை தம் கட்சியில் அணைத்துக் கொள்வதுபோல் வேறு யாருமே செய்ய முடியாது என்ற பாவனையை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார்.

உயிரோடு இருக்கும் காலம் வரை காங்கிரஸ்காரராக இருந்த பிவியை அந்த கட்சியிலிருந்து எடுத்துக் கொண்டதில் கேசிஆர் வெற்றி பெற்றார் என்றே கூறவேண்டும். கேசிஆரின் வழிமுறையை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் போகின்ற தெலங்காணா காங்கிரஸ் தலைவர்கள் தடுமாறி வருகிறார்கள்.

அதனால் தம் கட்சியைச் சேர்ந்த பிவியின் உயர்வை எடுத்துக்கூறும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கு பிவியின் குடும்ப அங்கத்தினர்களே ஒத்துழைக்கவில்லை. மக்கள் எதுவரை அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதே கேள்வி.

pv-narasimmarao-daughter1

இது இப்படி இருக்கையில் விரைவில் கவர்னர் கோட்டாவில் மூன்று எம்எல்சி இடங்களை பூர்த்தி செய்யப் போகிறார்கள். புதிதாக தனக்கு கிடைத்த வாய்ப்பை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பிவி நரசிம்மராவின் மகள் வாணி தேவியை எம்எல்சியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆலோசனையில் கேசிஆர் உள்ளதாக தெரிகிறது. இது மட்டும் நடந்தால் தான் எடுத்துக் கொண்ட ஒரு நிர்ணயித்தால் காங்கிரஸ் கட்சியை ஒரேடியாக விழுத்தி விடுவதோடு பிவி நரசிம்மராவு விஷயத்தில் தனக்குள்ள கமிட்மெண்ட் எத்தனை சீரியஸ் என்ற விஷயத்தையும் மக்களுக்கு புரியும் படியாக கூறுகிறார் என்றே கொள்ள வேண்டும்.

கேசிஆரின் இந்த புது நிர்ணயம் காங்கிரஸ் கட்சிக்கு மாஸ்டர் ரோஸ்ட் ஸ்ட்ரோக் ஆக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.