21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
new education policy - 2026

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 21ஆம் நூற்றாண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜாவ்டேகர் மற்றும் அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து விளக்கம் அளித்தனர்.

new education policy press meet - 2026
  • உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் 2035 க்குள் 50% மொத்த சேர்க்கை இலக்கு நிர்ணயம்
  • 2030-க்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்தவே புதிய கல்விக் கொள்கை
  • நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்
  • கல்விக் கட்டணங்கள் குறித்து புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • தேசிய ஆராய்ச்சி நிறுவனம் விரிவாக்கப்பட்டு சமூக அறிவியல் கள ஆய்வுகளுக்கு அனுமதி
  • கல்வித் துறைக்கான புதிய ஆய்வுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பு தரும்
  • கல்வித் துறையில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படும்
  • அனைவருக்குமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும்
  • தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கும், இலக்கியப் படைப்புகளுக்கும் ஊக்கம் அளிக்கப்படும்
  • பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்
hrd - 2026
  • உயர்கல்வியில் எம்.பில். ரத்து செய்யப்படுகிறது
  • பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்
  • தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் கல்விசார் படிப்புகள் இணையவழியில் தொடங்கப்படும்
  • தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டணங்கள் வெளிப்படையாகவும் முழுமையாகவும் வெளியிடப்படும்
  • கல்விக் கட்டணங்கள் தன்னிச்சையாக அதிகரிக்கப்படாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.