கொரோனா: குடும்பத்துடன் தனிமை படுத்திகொண்ட ராஜமவுலி! குணமானதும் ப்ளாஸ்மா தானம்!

Published:

rajamowli - 2026

இயக்குனர் ஷங்கர் அளவுக்கு பிரமாண்ட படங்களை வெற்றி படமாகியவர் ராஜமவுலி. இவர் இயக்கிய ‘நான் ஈ, பாகுபலி வாரி குவித்தது. ஒட்டு மொத்த இந்தியாவும் கொண்டாடும் இயக்குனராகிவிட்டார்.

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., நடிப்பில் RRR படம் தயாராகி வருகிறது, கொரொனா காரணமாக இப்படம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குனர் ராஜமவுலிக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், அவரது குடும்பத்திற்கும் நோய் அறிகுறி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ராஜமெளலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், “நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் சில நாட்களுக்கு முன்பு லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தோம். சில நாட்களில் காய்ச்சல் தானாகவே தணிந்தது, ஆனாலும் நாங்கள் சோதனை செய்யப்பட்டோம். இதன் விளைவாக இன்று லேசான கோவிட் 19 பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து டாக்டர்கள் பரிந்துரைத்தபடி நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்.

நாங்கள் அனைவரும் எந்த அறிகுறிகளும் இல்லாமல் நன்றாக உணர்கிறோம், ஆனால் எல்லா முன்னெச்சரிக்கை மற்றும் வழிமுறைகளையும் பின்பற்றுகிறோம்.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

நோய் எதிர்ப்பு சக்தி உருவானதும், பிளாஸ்மா தானம் செய்யக் காத்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img