அகமதாபாத் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 8 பேர் உயிரிழப்பு!

Published:

Screenshot 2020 0806 101212 - 2026

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Screenshot 2020 0806 102136 - 2026

உயிரிழந்தவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள்.

இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Screenshot 2020 0806 102114 - 2026

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்க்ள் உதவினர்.

மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (பி.எம்.என்.ஆர்.எஃப்) இறந்தவரின் உறவினர்களுக்கு தலா ரூ .2 லட்சம் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ .50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img