போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்த இளம்பெண்! கவர்ச்சி நடனம் ஆட வைத்த இன்ஸ்பெக்டர்!

இந்தியா சற்றுமுன்
Screenshot_2020_0818_134318

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் உள்ள கோவிந்த நகரை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் பார்ட்டிகளில் பாட்டு பாடி, நடனமாடும் தொழில் செய்து வருகிறார். இந்த பெண் தனது குடும்பத்துடன் அந்த பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் கடந்த மாதம் வீட்டை காலி செய்யும்படி டார்ச்சர் செய்தது மட்டுமல்லாது அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் அந்த பெண் வாடகைக்கு வேறு வீடு ஒன்றை தேடி வந்த நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் மீண்டும் அந்த பெண்ணை கடைவீதியில் வைத்து வம்புக்கு இழுத்துள்ளார்.

இதனால் அந்த பெண் இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்று உள்ளார்.

அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புகாரை அப்புறம் பார்த்துக்கலாம் முதலில் ஒரு நடனமாடி எங்களை குஷிப்படுத்து என்று கூறியதை அடுத்து அந்த பெண்ணும் வழியின்றி நடனமாடி உள்ளார்.

இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதுமட்டுல்லாது அந்த இன்ஸ்பெக்டர் மீண்டும் இன்னொரு நாள் அழைத்து நடனம் ஆட சொல்லி உள்ளார். அதன் பிறகு தான் அந்த பெண்னின் புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.