லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

இந்தியா சற்றுமுன்
miltry

வடக்குக் காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் லஷ்கர் – ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதி மற்றும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முன்னதாக திங்கள்கிழமை காலை, ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் லஷ்கர் ஏ தொய்பா தளபதி சஜ்ஜத் ஹைதர் என்கிற ராஜா தலைமையில் பயங்கரவாதிகள் நடத்திய திடீா் தாக்குதலில் பாதுகாப்புப் படையினா் 3 பேர் உயிரிழந்தனா்.

பாராமுல்லா மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடியில் மத்திய ரிசா்வ் காவல் படையினா் (சிஆா்பிஎஃப்), ஜம்மு-காஷ்மீா் காவல்துறையினா் அடங்கிய குழு பணியில் ஈடுபட்டிருந்தது. நேரில் பாா்த்த சாட்சியங்கள் அளித்த தகவல்படி, அந்தப் பகுதி புதா் ஒன்றிலிருந்து திடீரென வெளிப்பட்ட பயங்கரவாதிகள் மூவா் பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினா்.
இதில் சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவா், காவலா் ஒருவா் உயிரிழந்தார்.

சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணி தொடங்கியது. அப்போது கிரீரி பகுதியில் அந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பயங்கரவாதிகள் மூன்று பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோந்தவா்கள் என்பதும், ஒருவர் பயங்கரவாத அமைப்பின் தளபதி சஜ்ஜத் என்பதும் தெரிய வந்துள்ளது.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

சஜ்ஜத் கொல்லப்பட்டது பாதுகாப்புப் படையினரின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஏன் என்றால், பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பல தாக்குதல்களில் சஜ்ஜத் ஈடுபட்டிருப்பதும், அவர் இளைஞர்கள் பலரையும் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் பயங்கரவாத அமைப்புக்காக தேர்வு செய்யப்பட்டிருந்த 20 இளைஞர்களை கைது செய்திருப்பதாகவும் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.