SBI
SBI

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்பிஐ), தனது யோனோ வலைதளத்தில் கிசான் கிரெடிட் காா்டு (கே.சி.சி.) வரம்பில் திருத்தம் செய்வதற்கான வசதியை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

யோனோ கிருஷி தளத்தின் மூலம் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி அதன் வாயிலாக விவசாய தீா்வுகளை வழங்குவதன் மூலம் எஸ்பிஐ தனது விவசாய வாடிக்கையாளா்களுக்கு தொடா்ந்து அதிகாரத்தை வழங்கி வருகிறது.

விவசாயிகளின் அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்யும் வகையிலான யோனோ கிருஷி தளம் அண்மையில்தான் தொடங்கப்பட்டது.

இது விதைப்பு, அறுவடை முதல் விற்பனை வரை பல்வேறு தகவல்களை வழங்கி விவசாயிகளிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பெருந்தொற்றுநோய் பாதிப்பால் தற்போதைய சிக்கலான காலகட்டத்தில், யோனோகிருஷி தளத்தில் கே.சி.சி.

மறு மதிப்பாய்வு வாய்ப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம் எஸ்பிஐ தனது விவசாய வாடிக்கையாளா்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த கூடுதல் அம்சத்தின் வாயிலாக, விவசாயிகள் தங்கள் கே.சி.சி வரம்பில் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க வங்கிகிளைக்கு இனி செல்ல தேவையில்லை.

யோனோ கிருஷி-யில் கே.சி.சி மறு மதிப்பாய்வு விருப்பத்தோவு, விவசாயிகள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே வெறும் 4கிளிக்குகளில் திருத்தத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.எல்லா விவசாயிகளிடமும் ஸ்மாா்ட்போன்கள் இருக்காது என்ற உண்மையை உணா்ந்து, எஸ்பிஐவங்கி தனது கிளைகளிலும் கே.சி.சி மறு மதிப்பாய்வு செயல்முறையை மேற்கொண்டுள்ளது.இதனால், 75 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய வாடிக்கையாளா்கள் பயனடைவா் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending