கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது!

Published:

srilankan rupee
srilankan rupee

கள்ள நோட்டுகளுடன் தென்காசியை சேர்ந்த 2 பேர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர்

தென்காசி மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக புகார்கள் போலீசாருக்கு வந்த வண்ணம் இருந்தன அண்மையில் கடையநல்லூர் அருகே தென்காசியை சேர்ந்த ஒருவர் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டார்

இந்நிலையில் நாகர்கோவிலில் கள்ள நோட்டுகளுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர்கள் இருவரும் தென்காசி மேசியா நகரை சேர்ந்த ஹபிபுல்லா (25) பாதுஷா (42) என தெரியவந்தது

அவர்களிடமிருந்து இருந்து சுமார் 16,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஏற்கனவே கள்ள நோட்டு புழக்கம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக பாகிஸ்தான் வழியாக கள்ள நோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டன இதை அடுத்து மத்திய அரசு ரூபாய் 500 1000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்து புழக்கத்தில் இருந்த அனைத்து நோட்டுகளையும் திரும்பப் பெற்றது

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இருப்பினும் தற்போது ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டு வருகின்றனர் தென்காசியை சேர்ந்த சிலர் அவர்களிடம் இருந்து கலர் ஜெராக்ஸ் எடுப்பதற்கான இயந்திரங்கள் கணினி உள்ளிட்டவை தன்மையில் கைப்பற்றப்பட்டன இருப்பினும் தற்போது குடிசை தொழில் போல் கள்ள நோட்டுகளை அச்சடித்து வேறு இடங்களில் இருந்து வரவழைக்கும் புழக்கத்தில் விடுவது அதிகரித்து வருகிறது

Related articles

Recent articles

spot_img