கூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்துவோர்.. எச்சரிக்கும் காவல்துறை!

Published:

cell 2 - 2026

கூகுள் பே, பேடிஎம், போன் பே செயலிகளை பயன்படுத்தும் மக்கள் போலியான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

செயலிகளில் பணப்பரிமாற்றம் செய்யும் போது சந்கேதம் எழுவது இயல்புதான். அப்போது, மக்கள் அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொள்வது வழக்கம். ஆனால் அப்படியான கஸ்டமர் கேர் எண்ணை போலியானதாக பதிவு செய்து சிலர் ஏமாற்றி வருவதாக கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே போலியான எண்களுக்கு அழைப்பு விடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ள போலீஸார், இது தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Related articles

Recent articles

spot_img